தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்: கல்லூரி மாணவ, மாணவியருக்கு போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்: கல்லூரி மாணவ, மாணவியருக்கு போட்டி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டப்பட்டு, 50வது ஆண்டை முன்னிட்டு, பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. கல்லூரி மாணவ, மாணவியருக்கு, மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், வரும், 25 காலை, 10:00 மணிக்கு, நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் நடக்கிறது. முதல் பரிசு, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். முதல் பரிசு பெறுவோர், மாநில அளவில் பங்கேற்க தகுதிபெறுவர். அதில், வெற்றி பெறுவோருக்கு, முதல் பரிசு, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் நான்கு கிராம் தங்கப்பதக்கம்; இரண்டாம் பரிசு, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் நான்கு கிராம் தங்கப்பதக்கம்; மூன்றாம் பரிசு, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் நான்கு கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவ, மாணவியர், கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடமோ அல்லது போட்டி நடைபெறும் நாளன்று நேரிலோ விண்ணப்பித்து கலந்துகொள்ளலாம். விபரங்களுக்கு, 04286 - 281264, 94459 82856, 99522 62167 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை