4 சாயப்பட்டறைகளுக்கு 'சீல்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 சாயப்பட்டறைகளுக்கு 'சீல்'

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், நான்கு சாயப்பட்டறைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஜெயலட்சுமி கூறியதாவது: காவிரி ஆற்றில், சாயக்கழிவு நீர் ஆற்றில் கலக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், அரசு உத்தரவை மீறி, பல சாயப்பட்டறைகள் செயல்பட்டதாக தகவல் வந்தது. குமாரபாளையம் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன், 10க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இடிப்பு, மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று இரவு, புறவழிச்சாலை, வாசுகி நகர், சூளை மேடு, கோட்டைமேடு சக்தி நகர், தம்மண்ணன் சாலை, பழைய பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில், நான்கு சாயப்பட்டறைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டன. ஒரு பட்டறைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார். தாசில்தார் ரகுநாதன், ஆர்.ஐ., ரவிச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X