புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடுதல் மாணவர்கள் சேர்க்க வேண்டும்: குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் அரசு கலைக்கல்லூரி, கடந்த எட்டாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். அரசு விதிமுறையின் கீழ், இளநிலை பாடபிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. இதனால், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கல்லூரிக்கு, கூடுதல் மாணவர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பி. செல்வராஜ், போத்தராவுத்தன்பட்டி.

அடிப்படை வசதி ஏற்படுத்தப்படுமா? குளித்தலை யூனியன் குமாரமங்கலம், நல்லூர் பஞ்., சார்பில் செயல்பட்டு வரும் சமுதாயக்கூடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு. குடிநீர், கழிப்பறை வசதி உட்பட பல வசதிகள் இன்றி உள்ளது. இதனால், கிராமப்புற மக்கள் தங்களது, இல்லற நிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை உள்ளது. பொது நிதியிலிருந்து, சமுதாய கூடத்திற்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.

- என். கந்தசாமி, மேட்டு மருதூர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை