காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை எரித்து கொலை செய்த சித்தப்பா கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை எரித்து கொலை செய்த சித்தப்பா கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

குளித்தலை: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில், சித்தப்பா கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் டவுன் பஞ்., சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடாசலம், 43. இவருடைய மகள் நந்தினி, 19, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, காக்காதோப்பு கிராமத்தில், தனது சித்தப்பா ராஜூ, 38, வீட்டில் தங்கி, தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். கிராமத்துக்கு அருகில் உள்ள, வெள்ளமரத்து பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவரும், நந்தினியும் காதலித்து வந்தனர். இதற்கு சித்தப்பா ராஜூ எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து, நந்தினி தனது ஊருக்கு வந்து, தந்தையிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் பெற்றார். இந்நிலையில், ராஜூ, அவருடைய மனைவி சரசு ஆகியோர், கோவில் திருவிழாவிற்கு மருதூர் வந்தனர். இதற்கிடையில், காதலன் ரமேஷ் உறவினர்களுடன், பெண் கேட்க வருவதாக இருந்தது. இதையறிந்து ஆவேசமடைந்த ராஜூ, நேற்று முன்தினம் காலை, 6:00 மணியளவில் நந்தினியை தனியாக தோட்டத்துக்கு அழைத்து சென்றார். அங்கு, அவரை கீழே தள்ளிவிட்டு, அவர் மீது பெட்ரோலை ஊற்றி, தீ வைத்தார். இதில் நந்தினி பலத்த தீக்காயமடைந்தார். ராஜூக்கு லேசான காயமேற்பட்டது. இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக நந்தினி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாலை, 3:40 மணியளவில் இறந்தார். நந்தினியின் தந்தை வெங்கடாசலம், 43, கொடுத்த புகார்படி, குளித்தலை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ராஜூவை கைது செய்தனர். இச்சம்பவம், மருதூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X