அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுகோள்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர், அமராவதி ஆற்றுக்கு உடுமலையில் உள்ள அமராவதி அணையில் இருந்து, தண்ணீர் திறக்கப்படுகிறது.
அமராவதி அணை, ஆண்டுக்கு ஒரு முறையே நிரம்புகிறது. அப்போது மட்டுமே தண்ணீர் வருகிறது. பிற காலங்களில், கரூர் மாவட்டத்திற்கு உரிய நீரை தருவதில்லை. திருப்பூர் மாவட்ட அணைப்பகுதி விவசாயத்திற்கே, தண்ணீர் திறக்கப்படுகிறது என விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது கடும் வறட்சி நிலவுவதால், அணையில் நீரில்லை. கடந்தாண்டு, பொதுமக்கள் போராட்டம் நடத்திய பின்னர், தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தாண்டு தண்ணீர் திறக்கப்படாததால், கழிவுநீரை அமராவதி ஆற்றில் விடுகின்றனர். கரூர், லைட்ஹவுஸ் பகுதியில் இருந்து பசுபதிபாளையம், சணப்பிரட்டி வரை, சாக்கடை நீர் ஆற்றில் கலக்கிறது. இதனால், ஆற்றுப்பகுதியில் கழிவு நீர், தடைசெய்யப்பட்ட பாலிதீன் கவர்கள் நிறைந்து கிடக்கின்றன. அமராவதி ஆறு, நீரின்றி பாலைவனமாக காட்சியளிக்கிறது. அமராவதி அணையின் மொத்த கொள்ளளவு, 90 அடி. இதில், 60 அடி தண்ணீர் உள்ளது. எனினும், தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே, போதுமான நீர் இருப்பு இருந்தும், கரூர் மாவட்டத்திற்கு வரும் வகையில் தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை