தாட்கோவில் 86 பேருக்கு கடன்: கரூர் கலெக்டர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாட்கோவில் 86 பேருக்கு கடன்: கரூர் கலெக்டர் தகவல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: தாட்கோ மூலம், 86 பேருக்கு கடன் உதவி வழங்கப்படும் என, கலெக்டர் பேசினார். கரூர் கலெக்டர் அலுவலகத்தில், தாட்கோ மூலம் வங்கிகளுக்கு பரிந்துரை செய்த நிலுவை விண்ணப்பதாரர்கள், வங்கியாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் அன்பழகன் பேசியதாவது: வாழ்வில் பின்தங்கிய நிலையிலுள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தாட்கோ மூலம் பல்வேறு பயிற்சி, திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக தனி நிதி ஒதுக்கி, அதிகப்படியான மானியங்களுடன் வங்கி கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, தையல், ஆயத்த ஆடை தயாரித்தல், உணவக தொழில், அரிசி ஆலை, பால்பண்ணை, துறைவாரி பண்டக சாலை, சுற்றுலா வாகனம், இரும்புக்கடை, டிஜிட்டல் ஸ்டுடியோ உள்ளிட்ட வருமானம் தரக்கூடிய தொழில்களில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெறப்பட்ட, 89 மனுக்களில் தகுதியானவர்களுக்கு விரைந்து கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை