உலக ரத்த கொடையாளர்கள் தினத்தில் ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக ரத்த கொடையாளர்கள் தினத்தில் ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, ரத்ததானம் செய்தவர்களை பாராட்டி, பரிசு வழங்கப்பட்டது. கரூர், வாலண்டரி ரத்த வங்கியில், உலக ரத்த கொடையாளர்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. டாக்டர் கவுதம் தலைமை வகித்தார். கூடுதல் கண்காணிப்பாளர் பாரதி, ரத்ததானம் செய்தவர்களை பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தார். அவர் பேசுகையில்,'' ரத்ததானம் செய்வது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். இதனால், ஏராளமானவர்களுக்கு சிகிச்சைக்காக ரத்தம் கிடைக்க பெற்று பயனடைகின்றனர்,'' என்றார். உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், வணிகர்கள் ரத்ததானம் செய்தனர். டி.எஸ்.பி., கும்மராஜா, ரோட்டரி பாஸ்கர், வாலண்டரி ரத்த வங்கியின் நிர்வாகி சரவணன், செய்தி தொடர்பாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X