பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர், வெண்ணெய்மலையில் உள்ள, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில், உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மேல்நிலை குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைபடி, 30 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதிய நிர்ணயப்படி, ஊதியம் வழங்க நடவடிக்கை தேவை. மேலும், 2010ம் ஆண்டு அரசு ஆணைப்படி பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒன்றிய செயலாளர் துரைசாமி, தலைவர் ரங்கன், பொருளார் குமாரசாமி, மாவட்ட நிர்வாகி கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X