அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஜூன் 15, 2018
Advertisement

சுகாதார வளாகம் பயன்பாடின்றி வீண்: கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில், பஞ்சாயத்து சார்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை, கொடிக்கால் தெரு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுகாதார வளாகம், தற்போது எந்தவிதமான பயன்பாடுமின்றி முடங்கியுள்ளது. வளாகத்தில் தண்ணீர் வசதி, விளக்கு வசதி ஆகியவை இல்லை. இதனால், வளாகம் பயன்படுத்துவதில் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
மின்கம்பம் சேதம் சரி செய்யப்படுமா? கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி பஞ்சாயத்து, மகிளிப்பட்டி சாலையில் பஞ்சாயத்து மின்கம்பத்தில், விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. மின் கம்பத்தின் நுனியில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மகிளிப்பட்டி பகுதியில் இருந்து, லாலாப்பேட்டை வரும் விவசாயிகள், மக்கள் வெளிச்சமின்றி அச்சத்தில் நடந்து வருகின்றனர். பழுது ஏற்பட்டுள்ள மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாய்க்கால் கரையில் மண் அரிப்பு: கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள, மகிளிப்பட்டி அருகில், கட்டளை வாய்க்கால் செல்கிறது. மாயனூர் காவிரியாற்றில் இருந்து, பிரிந்து திருச்சி வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் மகிளிப்பட்டி, நந்தன்கோட்டை பிரிவு வாய்க்கால் சாலையில் கரை வலுவிழந்து மண் அரிப்பு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மண் அரிப்பால், வாய்க்கால் கரையில் விவசாயிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு செல்கின்றனர்.

தார்ச்சாலை சேதம்; மக்கள் கடும் அவதி: கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள, சிந்தலவாடி மாரியம்மன் கோவில் செல்லும் தார்ச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன் வழியாக புணவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, சிந்தலவாடி மக்கள் லாலாப்பேட்டைக்கு வாகனத்தில் செல்கின்றனர். சாலையில், பல இடங்களில் கற்கள் பெயர்ந்து சேதமேற்பட்டுள்ளது. சாலை மோசமான நிலையில் உள்ளதால் மக்கள், பள்ளி மாணவ, மாணவியர் இரவு நேரத்தில் செல்லும் போது அவதிப்படுகின்றனர்.

சாலையில் குழி சீர் செய்யப்படுமா? கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள, மகாதானபுரம் பகுதியில் இருந்து, அக்ரஹாரத்திற்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது. இது சேதமடைந்து, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மக்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சாலை தற்போது குண்டும், குழியுமாக மாறி வருகிறது. இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், குழியில் விழுந்து அடிபட்டு விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். சில ஆண்டுகளாக சரி செய்யாமல் கிடப்பில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X