வேலைக்கு சென்ற வாலிபரிடம் பணம் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட ஐவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலைக்கு சென்ற வாலிபரிடம் பணம் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட ஐவர் கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: வேலைக்கு சென்ற வாலிபரிடம், பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட ஐந்து பேரை லாலாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, பிள்ளபாளையத்தை சேர்ந்தவர் கோபி, 24. இவர், திருச்சியில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த, 13 காலை, 8:00 மணியளவில், திருச்சிக்கு வேலைக்கு செல்ல, பிள்ளபாளையம் வாய்க்கால் பாலம் அருகில் நடந்து சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த, 18 வயதுடைய இரண்டு பேர் மற்றும், 16 வயதுடைய மூன்று பேர், கோபியிடம் பணம் கேட்டு தகராறு செய்து அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், கோபிக்கு காயமேற்பட்டது. அவரது தந்தை, பாலகிருஷ்ணன் லாலாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்படி, ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை