93 பட்டாக்கள் ரத்து: கலெக்டர் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

93 பட்டாக்கள் ரத்து: கலெக்டர் அறிவிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: குப்பம் கிராமத்தில் பயன்படுத்தாத, 93 பட்டாக்கள் ரத்து செய்யப்படும் என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: அரவக்குறிச்சி வட்டம், குப்பம் கிராமத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், 2001ம் ஆண்டில் வழங்கப்பட்ட, 93 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. அந்த இடத்தில், 17 ஆண்டுகளாக வீடு கட்டி குடியேறவில்லை. பட்டா வழங்கப்பட்ட. ஆறு மாதங்களுக்குள் வீடு கட்டி, குடியேற வேண்டும். அவ்வாறு குடியேறாவிட்டால், வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்படுமென, வருவாய் வாரியம் நிலை ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 93 பட்டாக்களை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, 15 நாட்களுக்குள் இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்கள், ஆட்சேபனை இருப்பின், தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலம்) தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X