2 நாள் போராட்டத்துக்குப்பின் தம்பதியர் உடல் ஒப்படைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 நாள் போராட்டத்துக்குப்பின் தம்பதியர் உடல் ஒப்படைப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: சிட்பண்ட்ஸ் நிறுவனத்தினர் தந்த உறுதியை அடுத்த, தற்கொலை செய்து கொண்ட, பவானி தம்பதியர் உடலை, இரண்டு நாள் போராட்டத்துக்குப்பின், உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.


ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த, பருவாச்சி இரட்டை கரடு கண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 60; இரும்பு பட்டறை நடத்தி வந்தார். இவர் மனைவி மாதேஸ்வரி, 53. வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து, ஸ்ரீராம் சிட்பண்ட்சில், மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்றார். தவணை செலுத்தாததால், வீட்டை ஜப்தி செய்வதாக, சிட்பண்ட்ஸ் நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இதனால், தம்பதியர் கடந்த, 11ல் விஷம் குடித்தனர். மறுநாள் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.உடற்கூறு பரிசோதனை, ஈரோடு அரசு மருத்துவமனையில், 13ல் நடந்தது. சிட்பண்ட்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அடமான பத்திரத்தை திருப்பி தருவதுடன், இழப்பீடு தொகை வேண்டுமெனக்கூறி, உடல்களை வாங்க மறுத்து, உறவினர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பவானி சிட்பண்ட்ஸ் நிர்வாகிகள், அந்தியூர் போலீசாருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 'இறந்த கோவிந்தராஜ் மகன் தேவராஜ், 50 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். மீதி தொகை கட்ட வேண்டியதில்லை. அடமான பத்திரத்தை, தலைமை அலுவலகத்தில் கேட்டு பெற்றுத் தருகிறோம்' என்று உறுதியளித்தனர். இதை, உறவினர்களிடம், ஈரோடு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மதியம், 2:00 மணியளவில் தம்பதியர் உடலை, உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X