ரம்ஜான் பண்டிகை எதிரொலி: மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரம்ஜான் பண்டிகை எதிரொலி: மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ரம்ஜான் பண்டிகையால், வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்ததால், ஈரோடு மாட்டுச்சந்தையில், கால்நடை விற்பனை சரிந்த போதிலும், இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை, நேற்று நடந்தது. இதில், தலா, 300 பசுக்கள், 300 எருமைகள், 150 கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பசுமாடு, 12 ஆயிரம் ரூபாய் முதல், 32 ஆயிரம் ரூபாய், எருமை, 12 ஆயிரம் ரூபாய் முதல், 38 ஆயிரம் ரூபாய் வரையும், கன்றுகள், 2,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின.''ரம்ஜான் பண்டிகையால், பிற மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது. ஆனால், தொடர் மழை பெய்வதால், தமிழகம், கர்நாடகா மாநில வியாபாரிகள் வந்தனர். பசு, கன்றுகளை ஆர்வத்துடன் வாங்கினர். இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது,'' என, மாட்டுச்சந்தை மேலாளர் முருகன் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை