பவானிசாகர் அணை நீர்மட்டம் 70 அடியை தொட்டது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 70 அடியை தொட்டது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானிசாகர்: பவானிசாகர் அணை நீர்மட்டம், நேற்றிரவு, 70 அடியை எட்டியது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, நீலகிரி மலைப்பகுதி, அணை நீர்த்தேக்கத்தை ஒட்டிய வனப்பகுதிகளில், தென்மேற்கு பருவமழை கொட்டுகிறது. இதனால் கோவை மாவட்டம், பில்லூர் நீர் மின் நிலைய அணையில் இருந்து, பவானிசாகர் அணைக்கு, நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த, 10ல், 55 அடியாக இருந்த நீர்மட்டம், ஐந்து நாளில், 15 அடி உயர்ந்து, நேற்றிரவு, 70 அடியை எட்டியது. நேற்று மாலை, 5:00 மணி நிலவரப்படி, அணைக்கு, 7,150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை இருப்பு, 10.6 டி.எம்.சி.,யாக இருந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை