மலைப்பாதையில் வாகனம் பழுது: 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலைப்பாதையில் வாகனம் பழுது: 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில், லாரி பழுதானதால், 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடகாவில் இருந்து திருப்பூருக்கு, பனியன் துணி ஏற்றிக்கொண்டு, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த, திம்பம் மலைப்பாதை வழியாக, நேற்று காலை, 5:00 மணிக்கு, லாரி வந்து கொண்டிருந்தது. எட்டாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது பழுதாகி, நகர முடியாமல் நின்றது. இதனால், போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, காலை, 9:00 மணிக்கு லாரியை ஓரம் கட்டினர். அதன்பின் நின்றிருந்த வாகனங்கள் போட்டி, போட்டு சென்றதால், மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்த பின் காலை, 10:00 மணியளவில் வாகனங்கள் செல்ல தொடங்கின. போக்குவரத்து பாதிப்பால், வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை