பண்ணாரி சோதனை சாவடியில் ரெய்டு: ரூ.26 ஆயிரத்தை கைப்பறிய லஞ்ச ஒழிப்பு போலீசார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணாரி சோதனை சாவடியில் ரெய்டு: ரூ.26 ஆயிரத்தை கைப்பறிய லஞ்ச ஒழிப்பு போலீசார்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சத்தியமங்கலம்: பண்ணாரி போக்குவரத்து சோதனைச்சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத, 26, 300 ரூபாயை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அடுத்த பண்ணாரியில் போக்குவரத்துத்துறை சார்பில் சோதனைச்சாவடி செயல்பட்டுவருகிறது. தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கிடையே மிக முக்கிய போக்குவரத்து சாலையில், தினசரி சுற்றுலா, சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் என பல ஆயிரம் வாகனங்கள், சோதனை சாவடியை கடந்து செல்கின்றன. இச்சாலையில் வரும் தமிழகம் மற்றும் பிற மாநில வாகனங்களை ஆய்வு செய்த பின்னர் தான் திம்பம் மலை சாலையில் பயணிக்க அனுமதிக்கப்படும். இந்நிலையில், இந்த சோதனை சாவடியில், சட்டவிரோதமாக, வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை, டி.எஸ்.பி புஷ்பராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், பண்ணாரி போக்குவரத்து சோதனைச்சாடியில் நேற்று, காலை, 6:00 மணியளவில் சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது, அவர்களிடமிருந்த ரொக்க பணத்தை கைப்பற்றி தணிக்கை செய்தபோது, கணக்கில் காட்டப்படாத, 26, 330 ரூபாயை கைப்பற்றினர். கணக்கில் வராத பணத்தை பற்றி அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ரமணன், உதவியாளர் அமிர்தம் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் , 3 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து டி.எஸ்.பி புஷ்பராஜ் கூறுகையில், '' சோதனையில், கைப்பற்றப்பட்ட பணம் எப்படி வந்தது என்பது குறித்து, இங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும். அதன்பிறகு, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை