பேச்சுவார்த்தைக்கு அழைக்காத ஆர்.டி.ஓ.,வைக் கண்டித்து தர்ணா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேச்சுவார்த்தைக்கு அழைக்காத ஆர்.டி.ஓ.,வைக் கண்டித்து தர்ணா

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், பேச்சுவார்த்தைக்கு அழைக்காத ஆர்.டி.ஒ.,வைக் கண்டித்து, விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, குடிமேனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற நிலங்களில், உயர் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று முன்தினம், நிலத்தை அளவீடு செய்ய வந்த ஆர்.டி.ஓ., சரவணனிடம் வாக்குவாதத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனிடையே, இரண்டு பெண்கள் உட்பட, மூன்று பேர் தீக்குளிக்க முயன்றதால், அங்கிருந்து அதிகாரிகள் சென்றனர். இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு, நேற்று காலை, 10:00 மணிக்கு வந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், மதியம், 2:00 மணிவரை காத்திருந்தனர். அப்போது, போச்சம்பள்ளி தாசில்தார் கோபிநாத், நான்கு விவசாயிகளை மட்டும், ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக தெரிவித்தார். இதைக்கண்டித்து, தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள், ஆர்.டி.ஓ., வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், விவசாயிகள் கலைந்து சென்றனர். இதுகுறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகளிடம் அனுமதி பெறாமல், விவசாய நிலங்களில், உயர்மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கையில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சாலை வழியாக கேபிள் அமைத்து, மின்பாதையைக் கொண்டு செல்லலாம். இல்லையென்றால், சந்தை மதிப்பிற்கு, நான்கு மடங்கு விலை கொடுத்து, அரசே நிலத்தை விலைக்கு, வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை