இன்ஜி., கலந்தாய்வு சான்று சரிபார்ப்பு: சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு சிக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., கலந்தாய்வு சான்று சரிபார்ப்பு: சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு சிக்கல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: சி.பி.எஸ்.இ., மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் வராததால், பொறியியல் கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா பல்கலை இணைவு பெற்ற கல்லூரிகளில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு விரைவில் துவங்க உள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள மையங்களில், கடந்த, 8ல் துவங்கிய சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று மாலை முடிந்தது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்களுக்கு, மே கடைசி வாரம்தான் தேர்வு முடிவு வெளியானது. அவர்களுக்கு இன்னும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இணையதளத்தில் எடுக்கப்பட்ட சான்றிதழில் பள்ளி முதல்வர் சான்றொப்பம் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, 'இன்கம்ப்ளீட்' என, பதிவு செய்து தருவதால், மாணவர்கள், பெற்றோர் கலக்கமடைந்துள்ளனர். இதுகுறித்து, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மைய பொறுப்பாளர் குணசேகரன் கூறுகையில், ''சான்று சரிபார்ப்பின்போது அசல் சான்று இருந்தால் மட்டுமே, 'கம்ப்ளீட்' என வழங்கப்படும். இல்லையெனில், 'இன்கம்ப்ளீட்' என்றுதான் வழங்கப்படும். கலந்தாய்வின்போது அசல் மதிப்பெண் சான்றிதழை கொண்டு சென்றால் போதும். எவ்வித பிரச்னையும் இல்லை,''என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை