வீடுகளில் கறுப்புக்கொடி: விவசாயிகள் எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளில் கறுப்புக்கொடி: விவசாயிகள் எதிர்ப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓமலூர்: விமான நிலைய விரிவாக்கத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றினர்.சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு, காமலாபுரம், சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி, பொட்டிபுரத்திலுள்ள, 570 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இதனால், 2,000 குடும்பத்தினரின் வாழ்வாதாரம், விவசாயம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டி.ஆர்.ஓ., சுகுமார், தாசில்தார்கள், விவசாயிகளிடம் நேரடியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்திவருகின்றனர். அதில், நிலத்தை வழங்க மாட்டோம் என, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். நேற்று காலை, சிக்கனம்பட்டி உள்பட நான்கு கிராமங்களில், விவசாயிகள், தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி ஏற்றி, எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X