கபினியில் 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு: காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கபினியில் 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு: காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மேட்டூர்: நிரம்பிய கபினி அணையிலிருந்து, வினாடிக்கு, 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டதால், தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரியாற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
கர்நாடகாவில், காவிரி உற்பத்தியாகும், குடகு மாவட்டத்தில் பலத்த மழை பெய்வதால், நேற்று, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்மழையால், நேற்று முன்தினம், வினாடிக்கு, 22 ஆயிரத்து, 800 கனஅடியாக இருந்த, கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து, நேற்று, 28 ஆயிரத்து, 300 கன அடியாக அதிகரித்தது. இதனால், நேற்று முன்தினம், 15 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, நேற்று, 17 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணை நிரம்ப, இன்னும், 32 டி.எம்.சி., நீர் தேவை. கர்நாடகா, கேரளா எல்லையிலுள்ள, வயநாடு நீர்பிடிப்பு பகுதியிலும், பலத்த மழை பெய்வதால், நேற்று காலை, வினாடிக்கு, 22 ஆயிரத்து, 500 கனஅடியாக இருந்த, கபினி அணைக்கான நீர்வரத்து, மாலை, 36 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அதற்கேற்ப, நேற்று முன்தினம், 13 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, நேற்று, 16 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணை நிரம்ப, இன்னும், 3 டி.எம்.சி., நீர் தேவை. கூடுதல் நீர்வரத்தால், ஒரே நாளில் கபினி அணை நிரம்பும் அபாயம் ஏற்பட்டது. அணை பாதுகாப்பு கருதி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, கபினியிலிருந்து, முதல்கட்டமாக வினாடிக்கு, 15 ஆயிரம் கனஅடி உபரிநீர், காவிரியில் திறக்கப்பட்டது. இது, நேற்றிரவு மேலும் அதிகரித்தது. இந்த நீர், கபினியிலிருந்து, 241 கி.மீ., தூரமுள்ள, மேட்டூர் அணைக்கு, நாளை காலை வந்து சேரும். கபினியில், உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரியாறு மற்றும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு ஏற்படும். நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 39.96 அடி, நீர் இருப்பு, 12.06 டி.எம்.சி., இருந்தது. வினாடிக்கு, 743 கனஅடி நீர் வந்தது. உபரிநீர் வந்தடையும்பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம், மளமளவென உயரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X