தற்கொலை சம்பவங்களை தடுக்க ஆயுதப்படை போலீசாருக்கு விரும்பிய இடத்துக்கு பணிமாற்றம் வழங்க டி.ஜி.பி.,உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தற்கொலை சம்பவங்களை தடுக்க ஆயுதப்படை போலீசாருக்கு விரும்பிய இடத்துக்கு பணிமாற்றம் வழங்க டி.ஜி.பி.,உத்தரவு

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: தமிழக போலீஸ் ஆயுதப்படையில், தற்கொலை சம்பவங்களை தவிர்க்கவும், வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் சங்கம் அமைக்கும் முயற்சியை தடுக்கும் வகையில், முதல் கட்டமாக, 3,540 பேருக்கு விரும்பிய இடத்துக்கு பணி மாற்றம் வழங்கி, டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின், 32 மாவட்ட ஆயுதப்படை, எட்டு மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார், பணிப்பழு, அதிகாரிகளின் டார்ச்சரால், தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வந்தது. இதற்கு எதிராக போராட்டங்களை நடத்த சங்கம் அமைக்கும் முயற்சியில், பலர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். முதல் கட்டமாக, மாவட்ட வாரியாக வாட்ஸ் ஆப், பேஸ்புக் குழுக்களை அமைத்து, அவற்றை அருகில் உள்ள மாவட்ட குழுக்களுடன் ஒருங்கிணைக்கும் பணிகளும் நடந்து வந்தன. இது குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து, ஆயுதப்படையில் பணியாற்றும், 11 ஆயிரம் போலீசாருக்கு விரும்பிய இடத்துக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம், மாநகரம் விட்டு மாநகரம் பணிமாற்றம் வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர கமிஷனர்கள் மூலம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, டி.ஜி.பி., அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மனுக்களை பரிசீலனை செய்த அதிகாரிகள், நேற்று முன்தினம் முதல் கட்டமாக, ஆயுதப்படை போலீசார், 3,540 பேருக்கு, 20 ஆயுதப்படை தலைமை காவலர்களுக்கும், விரும்பிய இடத்துக்கு பணி மாற்றம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இவர்களை தவிர சர்ச்சையில் சிக்கிய, பிரச்சனைக்குறிய ஏட்டுக்கள், எஸ்.எஸ்.ஐ.,க்கள், 77 பேருக்கு, மாவட்டம், மாநகரங்களுக்கு இடையே பணிமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளள்து. ஆயுதப்படையில், 3,540 பேர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து இரண்டு கட்டமாக, 7,460 பேரை பணிமாற்றம் செய்ய பட்டியல் தயாராகி வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mariappan - Tuticorin,இந்தியா
15-ஜூன்-201814:36:24 IST Report Abuse
Mariappan இது எப்போதும் நடக்கும் சாதாரண பணி மாறுதல் தான்.. தயவு செய்து இதனை மிகைப்படுத்தி கூற வேண்டாம்... பொதுவாக புதியதாக காவலர்கள் பயிற்சி முடிந்து மாவட்ட மாநகர ஆயுதப் படையில் பணியமர்தும் போதும் பணியிடங்கள் அடிப்படையில் பணிமாறுதல் வழங்குவது இயல்பானது தான்... இதனை காவலர்கள் தற்கொலை தடுக்க முயற்சி என்றால் .. அதை நீங்கள் வேண்டும் என்றால் நம்பலாம் காவலர்கள் நாங்கள் அல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை