'ஸ்மார்ட்' வகுப்பறை, டிஜிட்டல் தொழில் நுட்பம்: தனியார் பள்ளியை மிஞ்சி அரசுப்பள்ளி அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட்' வகுப்பறை, டிஜிட்டல் தொழில் நுட்பம்: தனியார் பள்ளியை மிஞ்சி அரசுப்பள்ளி அசத்தல்

Added : ஜூன் 15, 2018
Advertisement

பனமரத்துப்பட்டி: அரசு நடுநிலைப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளதால், மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, பாரப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், 114 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்குள்ள, ஐந்தாம் வகுப்பு, தனியார் பள்ளிக்கு இணையாக, டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது. ஆசிரியர் தங்கராஜா, சொந்த செலவில், 'ஸ்மார்ட்' வகுப்பறை அமைத்து, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பாடங்களை கற்றுத்தருகிறார். ஆங்கில எழுத்துகள், ஒலி எழுப்பியபடி, உச்சரிக்கும் பலகை உள்ளது. அதன் மூலம், மாணவர்கள், தினமும் ஆங்கில வாசிப்பு பயிற்சி பெறுகின்றனர். எழுதுபொருட்கள் அடங்கிய சுய மதிப்பீட்டு அங்காடி வைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு தேவையான பேனா, பேப்பர், ரப்பர் ஆகிவற்றுக்கு, காசு வைத்துவிட்டு, மாணவர்கள் எடுத்துக்கொள்கின்றனர். அங்கு, பாரப்பட்டி பள்ளி மாணவர்கள் வங்கி செயல்படுகிறது. அதில், பணம் செலுத்துதல், எடுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்கு, மேலாளர், காசாளர் உள்ளனர். இதன் மூலம், வங்கி சேவைகளை, மாணவர்கள் அறிந்துகொள்கின்றனர். கணினியில் ஆங்கில வாசிப்பு பயிற்சி, தினசரி கணிதம், தமிழ், ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடம் தொடர்பாக, சுற்றுச்சுழல், வாழ்க்கை முறை, சங்க காலம் குறித்து, படக்காட்சி(வீடியோ) மூலம் விளக்கப்படுகிறது. மாணவர்களின் விபரம், நோட்டுகளில் எழுதி, பதிவு செய்யப்படுவது வழக்கம். இங்கு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. மாணவரின் புகைப்படம், பெயர், ஆதார் எண், பெற்றோர் மொபைல் எண், ரத்தவகை உள்ளிட்ட விபரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு படித்த, 70க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, மின்னஞ்சல் முகவரியை, தங்கராஜா, ஏற்படுத்தித் தந்துள்ளார். ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வு நடத்தும்போது, வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வழங்கப்படுகிறது. விடைகளை எழுத வேண்டியதில்லை. விடைத்தாளில், வட்டவடிவத்திற்குள் நிழலடித்தல்(ஓ.எம்.ஆர்.,) மூலம் விடைகளை குறிக்க வேண்டும்.


இதன் மூலம், தேசிய திறனாய்வு தேர்வு, போட்டி தேர்வுகளில் பங்கேற்க, மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். விடைத்தாள்களை, ஆசிரியரின் மொபைல் போனில் ஸ்கேன் செய்தால், விடைத்தாள் திருத்தப்பட்டு, மதிப்பெண் தெரிகிறது. அதனுடன், சரியான பதில் தெரிவிக்கப்படுகிறது. தங்கராஜா கூறுகையில், ''அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் குறித்த அச்சம் மற்றும் கணினி பற்றிய பிரமிப்பை நீக்க வேண்டும். பெற்றோர், அரசுப்பள்ளியில், குழந்தைகளை சேர்க்க முன் வரவேண்டும் என்பதற்கு, இரு ஆண்டுகளாக, டிஜிட்டல் முறையில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்கு, கிராம மக்கள், தலைமையாசிரியர் ஒத்துழைப்பு தருகின்றனர்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை