அ.தி.மு.க., பிரமுகர் மிரட்டல்: தீக்குளித்த லாரி டிரைவர் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பிரமுகர் மிரட்டல்: தீக்குளித்த லாரி டிரைவர் பலி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

வாணியம்பாடி: அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கேட்டு, அ.தி.மு.க., பிரமுகர் மிரட்டல் விடுத்ததால், நேற்று முன்தினம் தீக்குளித்த லாரி டிரைவர், நேற்று இறந்தார்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, மேல்நிம்மியம்பட்டைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 52; லாரி டிரைவர். மனைவி தாமரை, 40. இவர்களது, 14 வயதில் பெண் குழந்தை, அங்குள்ள அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். செக்குமேட்டில் உள்ள, 75 சென்ட் நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த, அ.தி.மு.க., அவைத்தலைவர் ஜெய்சங்கர், 46, என்பவரிடம், கடந்த, 2014ல், ஏழு லட்சம் ரூபாய்க்கு, விலைபேசி, 2.50 லட்சம் ரூபாயை, முன்தொகையாக, கோவிந்தசாமி பெற்றுள்ளார். ஒப்பந்தப்படி, ஆறு மாதத்துக்குள், மீதிப் பணத்தைக் கொடுத்து, நிலத்தை, கிரயம் செய்யாமல், அவர் இழுத்தடித்ததால், வேறு ஒருவருக்கு, 12 லட்சம் ரூபாய்க்கு, கோவிந்தசாமி நிலத்தை விற்றுள்ளார். இதையடுத்து, அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுக்காததால், வாணியம்பாடி தாலுகா போலீசில், ஜெய்சங்கர் புகாரளித்தார். பணத்தை கொடுத்துவிடுவதாக, கோவிந்தசாமி உறுதி அளித்ததால், போலீசார், இருவரையும் சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம், பணம் கொடுக்காத ஆத்திரத்தில், குடும்பத்தினர் முன், ஜெய்சங்கர் தகாத வார்த்தையால் திட்டி, மிரட்டியுள்ளார். மனமுடைந்த அவர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை, 8:00 மணிக்கு இறந்தார். இதையடுத்து, உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள், நேற்று காலை, 11:00 மணிக்கு, வேலூர் மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்காயம் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின், 12:00 மணிக்கு, உடலை பெற்றுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X