பைக் மீது கார் மோதி தாய், மகன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது கார் மோதி தாய், மகன் பலி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செய்யாறு: செய்யாறு அருகே, பைக் மீது, கார் மோதி விபத்துக்குள்ளானதில், தாய், மகன் பலியாகினர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, அருகாவூரைச் சேர்ந்த நாகப்பன் மனைவி திலகம்,45, மகன் தமிழ்ச்செல்வன்,18, ஆகியோர், தண்டரை கிராமத்துக்கு, நேற்று முன்தினம் இரவு, பஜாஜ் பைக்கில் சென்றனர். பைக்கை, தமிழ்ச்செல்வன் ஓட்டிச் சென்றார். பெரும்பள்ளம் கிராம ஏரிக்கரை வளைவில் சென்ற போது, செய்யாறில் இருந்து, ஆரணி நோக்கி சென்ற, இன்னோவா கார், பைக்கின் பின்பக்கம் மோதியது. இதில், படுகாயமடைந்த திலகம் இறந்தார். தமிழ்ச்செல்வன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், நேற்று இறந்தார். செய்யாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை