நான் 'டப் ஸ்மாஷ்' கில்லாடி : சிணுங்கும் நடிகை ஸ்ரீபிரியா| Dinamalar

நான் 'டப் ஸ்மாஷ்' கில்லாடி : சிணுங்கும் நடிகை ஸ்ரீபிரியா

Added : ஜூன் 17, 2018
நான் 'டப் ஸ்மாஷ்' கில்லாடி : சிணுங்கும் நடிகை ஸ்ரீபிரியா

பூரித்த கன்னமும்; புதுப்பொலிவூட்டும் கண்களும்; ததும்பி வழியும் இளமையும்; தகிக்கும் ஏக்கப் பார்வையும் கொண்ட இளமொட்டு ஸ்ரீபிரியா. எத்தனையோ பிரியாக்களில் இளைஞர்களை ஈர்க்கும் பிரியாவாக சினிமாவில் தலைகாட்டி வருகிறார். தினமலர் சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக அவர் மனம் திறந்தது, இதோ...
* சொந்த ஊர் நம்ம தமிழ்நாடுதாங்க... புதுக்கோட்டை. பி.காம்., முடிச்சிருக்கேன்.
* சினிமா வாய்ப்பு அம்மா ரொம்ப ஆசைப்பட்டாங்க. அப்பாவின் நண்பர் ஒருவர் மூலமா வாய்ப்பு கதவை தட்டியது. தவறவிடாமல் வந்துட்டேன்.
* நடித்தவை...பில்லா பாண்டி, வேட்டை நாய் மற்றும் ஒரு பெயரிடப்படாத படத்தில் நடித்து கொண்டு இருக்கிறேன். தவிர 'டிவி' சீரியல்களும் நடிச்சிட்டு இருக்கேன்.
* 'டப் ஸ்மாஷ்'ல கில்லாடியாமே...ஆமாங்க... சும்மா இருக்கும்போது டான்ஸ் ஆடுவேன். அலைபேசியில் 'டப்ஸ் மாஸ்' பண்ணி தோழிகளுக்கு ஷேர் பண்ணுவேன்.

* பிடித்த வேடம்...இயல்பாகவே எனக்கு கதாநாயகியா நடிக்கிறதவிட 'வில்லி'ன்னா ரொம்ப பிடிக்கும். அப்படி வேடம் கிடைத்தால் 'படையப்பா' ரம்யா கிருஷ்ணன் போல செய்யணும்ங்கிறது என்னோட ஆசை.

* பிடித்த நடிகர் ஜெயம் ரவியின் தீவிர ரசிகையாக்கும். அவரோட சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துட்டே இருக்கேன். அதேமாதிரி அஜித் உடனும் சேர ஆசை உண்டு. ம்... அதிர்ஷ்டம்தான் கைகொடுக்கணும்...

* பிடித்த நடிகை...ஐஸ்வர்யாராய்... ப்பா... அவரது கண்கள் எத்தனை அழகு

* ரோல் மாடல்....தீபிகா படுகோனே

* பிடித்த ஊர்...தமிழ்நாட்டில் சென்னை; வெளிநாடுன்னா துபாய் அருமையான இடம்.

* பெண்களுக்கு...பெண்கள் தைரியமாகவும், பயம் இல்லாமல்... நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.
*'கிளாமர்' காட்டுவீங்களாஎனக்கு கிளாமரா நடிக்க விருப்பம் இல்லை. அப்படியே வந்தாலும் அதை தவிர்த்து விடுவேன்.

* விருது ஏதாவது...சிறந்த நடிகைக்காக சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கத்திடம் விருது பெற்றுள்ளேன். பெரிய நடிகையா வந்தாலே விருது கெடைச்சது போலத்தானே.

* காதல் கீதல் உண்டா?எனக்கு பலர் காதல் கடிதம் கொடுத்து இருக்காங்க. ஆனால் நான் அந்த மாதிரியான ஆட்களை கண்டால், ஒரு 'ஹாய்' சொல்லிட்டு போய்ட்டே இருப்பேன். நமக்கு எதுக்கு பொல்லாப்பு.

* இன்றைய இளைஞர்கள்..சுறுசுறுப்பும், திறமையும் இருந்தால் முன்னேறி போய்ட்டே இருக்கலாம். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நாம கடமையில் கண்ணா இருந்தால் உச்சம் தொடலாம்.
இவரை பாராட்ட: sreep848@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X