சாரதா ஊழல்: சிதம்பரம் மனைவிக்கு 'சம்மன்' Dinamalar
பதிவு செய்த நாள் :
சாரதா ஊழல்: சிதம்பரம் மனைவிக்கு, 'சம்மன்'

புதுடில்லி : சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவியும், வழக்கறிஞருமான நளினியை, விசாரணைக்கு ஆஜராகும்படி,அமலாக்கத்துறை சார்பில், புதிய, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது.

சாரதா ஊழல், சிதம்பரம் மனைவி, சம்மன்,  நளினி

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவை சேர்ந்த, 'சாரதா சிட்பண்ட்' என்ற நிதி நிறுவனம், பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதை அடுத்து, அந்நிறுவனத்தின் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர், 2016ல்


வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக, அந்நிறுவனத்தின் வழக்கறிஞரான, நளினியைவிசாரணைக்கு ஆஜராகும்படி, 2016ல், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.'இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் உடையது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், நளினி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து, கோல்கட்டா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, இரண்டு முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 'வழக்கு விசாரணைக்காக, பெண்களை, வெளியூருக்குஅழைக்க சட்டத்தில் இடமில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது. மேலும், அவருக்கு

Advertisement

மீண்டும் புதிதாக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் நளினியின் வாக்குமூலத்தை அவசியம் பதிவு செய்ய வேண்டும் என்பதால், அவரை நாளை, கோல்கட்டாவில் உள்ள பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி,அமலாக்கத்துறையினர் புதிதாக சம்மன் அனுப்பி உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
19-ஜூன்-201820:00:28 IST Report Abuse

mindum vasanthamகட்டுமரம் , மற்றும் சசி குடும்பத்துக்கு சவால் விடுவது போல் வளர்ந்து வருகிறார்

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஜூன்-201817:33:11 IST Report Abuse

இந்தியன் kumarதமிழனின் மானத்தை காக்க வந்த குடும்பம் நம்புங்க மக்களே நம்புங்கள் . இவ்வளவு சொத்து சேர்த்து வைத்து எங்க கொண்டு போக போறீங்க , நல்ல பெயரைசம்பாதிங்கப்பா

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
19-ஜூன்-201818:45:54 IST Report Abuse

Sitaramen Varadarajanஇத்தாலி அடிமைக்கு அடிமையாக இருக்க.......துரோகிகளின் குடும்பம். ஆயுள் முழுவதும் திஹார் அல்லது அந்தமான் சிறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுவே மிக சிமிளானதாக இருக்கும்....

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஜூன்-201817:21:49 IST Report Abuse

இந்தியன் kumarகுடும்பமே சம்மனை எதிர்கொண்டு வருகிறது கேட்டால் பழிவாங்கும் நடவடிக்கை என ஊழல் காங்கிரஸ் கட்சியினர் புலம்புவார்கள்

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X