'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்'

சென்னை: 'காவிரி விவகாரத்தில், கர்நாடகா கண்ணில் வெண்ணெய்யையும், தமிழக கண்ணில் சுண்ணாம்பையும் தடவ முற்படும், மத்திய அரசின் வேடம், வெகுநாட்களுக்கு நிற்காது' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம்,மத்திய அரசு,நாடகம்,ஸ்டாலின்,திமுக

அவரது நேற்றைய அறிக்கை: கர்நாடக அரசு, 20 நாட்களுக்கும் மேலாக, தங்கள் மாநில பிரதிநிதியின் பெயரை, மத்திய அரசுக்கு

அளிக்காமல், வேண்டுமென்றே தாமதம் செய்து வருகிறது. 'மீண்டும், உச்ச நீதிமன்றத்தை நாடப்போகிறோம்' என,பிரதமரிடம் கோரிக்கை வைத்திருப்பதாக, கர்நாடக முதல்வர், புதிய பிரச்னையை கிளப்பி உள்ளார்.

காவிரி பிரச்னை தொடர்பாக பேச, தமிழக முதல்வரையும், எதிர்க்கட்சிகளையும் சந்திக்க மறுத்த பிரதமரும், நீர்வளத்துறை அமைச்சரும், கர்நாடக முதல்வரை சந்திக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது, தமிழகத்தையும்,தமிழக விவசாயிகளையும், பிரதமர் மோடி ஒரு பொருட்டாகவே கருதவில்லை என, புலப்படுகிறது.

கர்நாடகா கண்ணில் வெண்ணெய்யையும், தமிழக கண்ணில் சுண்ணாம்பையும் தடவ முயலும்,

Advertisement

மத்திய அரசின் வேடம் வெகுநாட்களுக்கு நிற்காது. ஆகவே, இனியும் தாமதிக்காமல், கர்நாடக அரசு, தங்கள் மாநிலத்திற்கான பிரதிநிதியின் பெயரை, மத்திய அரசுக்கு உடனே அளித்து, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thulasingam Pillai - Port Harcourt,இந்தியா
20-ஜூன்-201820:42:47 IST Report Abuse

Thulasingam Pillai"காவிரி பிரச்னை தொடர்பாக பேச, தமிழக முதல்வரையும், எதிர்க்கட்சிகளையும் சந்திக்க மறுத்த பிரதமரும், நீர்வளத்துறை அமைச்சரும், கர்நாடக முதல்வரை சந்திக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது, தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும், பிரதமர் மோடி ஒரு பொருட்டாகவே கருதவில்லை என, புலப்படுகிறது"

Rate this:
கல்யாணராமன் - Chennai,இந்தியா
20-ஜூன்-201820:09:43 IST Report Abuse

கல்யாணராமன்ஸ்டாலின் சும்மா இல்லாமல் ஒரு அறிக்கையைவிட்டு இங்கே எத்தனை பேரிடம் பாட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறார் பார்த்தீர்களா.

Rate this:
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா
20-ஜூன்-201816:47:17 IST Report Abuse

கருப்பட்டி சுப்பையாதம்மாதுண்டு சுண்டெலி வளர்மதி கெத்தா அரஸ்ட் ஆவுது.. AK 74, அரிசிகப்பல் கதை சொன்ன சைமன் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்வாசல்ல நிக்கறான். ஐநா சபைய பாக்கட்ல வச்சுருக்கற மாரி சீன் ஓட்ற டேனியல் ஜெர்மனிக்கு ஓடிப்போச்சு.. கூடங்குள குரளிவித்தக்காரன் உதயகுமார் பெங்களூர்ல ஃபுரபசர் வேல பாக்கப் போறன்னு 2 பக்க லெட்டர் எழுதி வச்சுட்டு சுவரேறி குதிச்சு ஓடிட்டான்.. அமீர் கோவைல வாங்குன அடில அமைதியாயிட்டான்.. கிழ பாரதி எங்கனே தெரில.. கவுதமனுக்கு தெரியும் இப்ப மாட்னா பிதுக்கிடுவாங்கன்னு... சுடல நடக்கறது என்னனு தெரியாத அம்னீஷியா பேஷண்ட் மாரி துண்டு சீட்ட பாத்து தப்புதப்பா பேசிட்டுத் திரியுறார் .

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X