குமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
குமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்பு

சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மீண்டும் வம்படி செய்யத் துவங்கி இருப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குமாரசாமி,வம்பு,வலுக்கிறது,எதிர்ப்பு

காவிரி பிரச்னையில் 17 ஆண்டு விசாரணைக்கு பின் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் ஏற்றன. ஆணையத்திற்கு தங்கள் மாநிலம் சார்பில் பிரதிநிதிகளை பரிந்துரை செய்துள்ளன.ஆனால் கர்நாடக அரசு வழக்கம் போல தீர்ப்பை ஏற்க மறுத்து, ஆணையத்திற்கு மாநில பிரதிநிதியை பரிந்துரைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி 'பார்லிமென்டில் ஒப்புதல் பெற்றே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும்' என பிரதமர்மோடி, மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து வலியுறுத்தி உள்ளார். அவரது கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக அரசு 20 நாட்களுக்கும் மேலாக, தங்கள் மாநில பிரதி நிதியின் பெயரை மத்திய அரசுக்கு அளிக்காமல், வேண்டுமென்றே தாமதம் செய்து வருகிறது. 'மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடப்போகிறோம்' என, பிரதமரிடம் கோரிக்கை வைத்திருப்பதாக, கர்நாடக முதல்வர் புதிய பிரச்னையை கிளப்பி உள்ளார்.

காவிரி பிரச்னை தொடர்பாக பேச தமிழக முதல்வரையும், எதிர்க்கட்சிகளையும் சந்திக்க மறுத்த பிரதமரும், நீர்வளத்துறை அமைச்சரும்,

Advertisement

கர்நாடக முதல்வரை சந்திக்கின்றனர். தமிழகத்தையும் தமிழக விவசாயிகளையும் பிரதமர் மோடி ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மத்திய அரசின் வேடம் வெகுநாட்களுக்கு நிற்காது.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, பா.ம.க., உட்பட பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள் குமாரசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா
20-ஜூன்-201820:37:40 IST Report Abuse

Thulasingam Jayaram Pillai"காவிரி பிரச்னை தொடர்பாக பேச தமிழக முதல்வரையும், எதிர்க்கட்சிகளையும் சந்திக்க மறுத்த 'பிரதமரும், நீர்வளத்துறை அமைச்சரும்', கர்நாடக முதல்வரை சந்திக்கின்றனர்.

Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201818:26:03 IST Report Abuse

Yaro Oruvanசுடலை மணிமேகலைக்கிட்ட பேசலாமே நமக்கு மோடியை திட்டனும்.. காவிரி வந்தா என்ன வராட்டி என்ன? வந்தாலும் திட்டுவோம் வராட்டியும் திட்டுவோம்.. வராததற்கு இவ்வளவு குறை சொல்லிவிட்டீர்கள் - நாளை தீர்வு கண்டு தண்ணீர் வரும்போது அதற்கு மோடி காரணம் அல்ல என்று சப்பைக்கட்டு கட்டுவீர்கள்.. வராவிட்டால் மோடி காரணம் வந்தால் மோடி காரணம் இல்லை.. நல்லா வருவீங்கடா

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜூன்-201816:17:35 IST Report Abuse

Endrum Indianகொமாரு சொன்னது டில்லி சென்று வந்த பின் "நாங்கள் எழுப்பிய தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளை தீர்க்காதபோதும், மத்திய அரசுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிப்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 2 உறுப்பினர்கள் இன்னும் 2 அல்லது 3 நாளில் நியமனம் செய்யப்படுவார்கள்". நல்ல வாங்கிக்கட்டிக்கொண்டு வந்தது போலத்தெரிகின்றது நிதி ஆயோக் கூட்டத்தில்.

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X