ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் : அமைச்சரின் பேச்சால், 'பகீர்' - Jayalalitha | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெ., கொள்ளையடித்த பணம் : அமைச்சரின் பேச்சால், 'பகீர்'

Added : ஜூன் 20, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வேடசந்துார்/l ''ஜெயலலிதா கொள்ளைஅடித்த பணத்தை, தினகரன் மூலம் பெற்று, 18 எம்.எல்.ஏ.,க்கள் துரோகம் செய்கின்றனர்,'' எனப் பேசி வனத்துறை அமைச்சர் சீனிவாசன், 'பகீர்' கிளப்பியுள்ளார்.
'உலகில் பிரிக்கவே முடியாதது எது' என கேட்டால், 'அமைச்சர் சீனிவாசனும், சர்ச்சை பேச்சுக்களும்' என அடித்து கூற லாம். தற்போதைய அரசியலில், 'சர்ச்சை பேச்சுகளின் நாயகன்' இவர். சசிகலா ஆதரவு நிலையில் இருந்த போது, 'மருத்துவமனையில் அம்மா இட்லி, சட்னி சாப்பிட்டார். அதை நாங்கள் பார்த்தோம்' என சத்தியம் செய்தார்.சசிகலாவை எதிர்த்த பின், 'நாங்கள் யாரும் அம்மாவை பார்க்கவில்லை' என 'திகில்' கிளப்பினார். உளறு வாயர்இதே போல அவ்வப்போது, 'திகில், பகீர்' பேச்சுகள் பறக்கும். சில மாதங்கள் அடக்கி வாசித்த அவர், நேற்று முன்தினம், சர்ச்சை பேச்சில் உச்சம் தொட்டுவிட்டார்.'அம்மா கொள்ளைஅடித்த பணம், தினகரனிடம் உள்ளது' என பேசி, 'நம்பர் ஒன் உளறு வாயர்' என சமூக ஊடகங்களில் பட்டம் வென்று விட்டார். காவிரி பிரச்னையில், தமிழக அரசை பாராட்டி, அ.தி.மு.க., சார்பில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் கூட்டம் நடந்தது.அவர் பேசியதாவது:அம்மாவால் கட்சியில், ஒதுக்கிவைக்கப்பட்டவர் தினகரன். அம்மாவால், எம்.எல்.ஏ.,வான, 18 பேர் தற்போது அந்த துரோகியுடன் உள்ளனர். அம்மாவால் கேடி, ரவுடி என ஒதுக்கிவைக்கப்பட்ட தினகரனுடன் போனவர்கள், அவரை மகாத்மா, புத்தர் என்கின்றனர். கேப்பையில் நெய் வடிகிறது என்றால், கேட்பவர்களுக்கு எங்கே போச்சு அறிவு.இவர்களால் தான் ஆட்சி நடப்பது போல, 'முதல்வர் பழனிசாமியை நீக்கவேண்டும்' என்றனர். சபாநாயகரிடம் மனுக்களை கொடுத்த பின், அவர் ஒரு மாதம் அவகாசம் கொடுத்தார். அவகாசம் பெற்று மைசூர், அமெரிக்கா என ஜாலியாக சுற்றினர்.அம்மாவால் கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக் கொண்டனர். ஸ்டாலினிடமும் பணம் பெற்றுக் கொண்டு, ஸ்டாலின் முதல்வர், தினகரன் துணை முதல்வர், மற்றவர்கள் எல்லாம் அமைச்சர்கள் என கனவு கண்டனர். அதிர்வலைகள்இதை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா? எனவே அவர்களை சபாநாயகர் நீக்கினார். தினகரனால் முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் பலர் நொந்து போய் விட்டனர்.இவ்வாறு அவர் பேசினார்.----

சீனிவாசனின் இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் வலம் வந்து, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudharshana - Aukland ,நியூ சிலாந்து
20-ஜூன்-201809:38:57 IST Report Abuse
sudharshana இதற்கெல்லாம் யாரும் எந்த முக்கியத்துவமும் கொடுத்து செய்யப்போவது எதுவும் இல்லை. வேலை யை பாருங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X