chennai | மெரினாவி்ல் யோகா தினம்...| Dinamalar

மெரினாவி்ல் யோகா தினம்...

Updated : ஜூன் 21, 2018 | Added : ஜூன் 21, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பிரதமர் மோடி யோகாவிற்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து இன்றைய தினத்தையே யோகா தினம் என்று அறிவிப்பு செய்திருக்கிறார்.

மக்கள் எந்த அளவிற்கு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள சென்னை மெரினா கடற்கரையி்ல் காலை வேளையி்ல் ஒரு ரவுண்ட் சென்றேன்

மெரினா வழக்கம் போலத்தான் இருந்தது, யோகா தினத்திற்காக தன்னை கொஞ்சமும் மாற்றிக்கொள்ளவில்லை, கடந்த வருடம் கூட போலீசார் மற்றும் யோகா வகுப்பு நடத்துபவர்கள் கடற்கரையில் பெரிய அளவில் யோகா நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தனர் இந்த வருடம் அப்படி ஏதுமில்லை, எல்லாமே ஆரம்பஜோர்தான் போலும்.

மெரினா திறந்த வௌி படுக்கை ஸ்தலமாக முன்பு சிலருக்கு இருந்தது இப்போது அந்த சிலர் பலராகிவிட்டனர்.துாரத்தில் இருந்து பார்க்கும் போது கைகளை குவி்த்து வணக்கம் போடுவது போல ஒருவர் கடற்கரை மணலில் கால்களை குவித்து வைத்திருந்தார். சிரமமான யோகா போலும் பக்கத்தில் போய் பார்க்கலாம் என்று சென்றால், மனுஷன் கால்களை அஷ்ட கோணலாக்கிக்கொண்ட நிலையில் அசந்து துாங்கிக்கொண்டு இருந்தார் முதல் நாள் உள்ளே போன 'நெப்போலியன்' வேலையாக இருக்கலாம்!.பெட்டி படுக்கை சைக்கிளுடன் காணப்பட்ட ஒருவர் செல்ப் ஷேவிங் செய்து கொண்டிருந்தார் ரொம்பநாளா கடற்கரையில் குடியிருப்பார் போலும்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஸ்கேட்டிங் சென்று கொண்டு இருந்தனர்.வழக்கமாக யோகா செய்பவர்கள் கண்களை மூடி தியானத்தில் இருந்தனர்.சிலர் நாயை வாக்கிங் கூட்டிக்கொண்டு செல்கிறார்களா? அல்லது நாய் தன் எஜமானரை வாக்கிங் கூட்டிக்கொண்டு செல்கிறதா? என்று கண்டுபிடிக்கமுடியாதபடி வாக்கிங் நடந்து கொண்டிருந்தது.

உடற்பயிற்சியில் புதிது புதிதான முயற்சியில் சிலர் ஈடுபட்டிருந்தனர் கர்லாக்கட்டை சுத்திதான் பார்த்திருக்கிறோம் ஆனால் அதை ஸ்டீல் பார்போல பயன்படுத்துவதையும்,கயிற்றை மல்லுக்கட்டி இழுத்து உடம்பை குறைக்க செய்யும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ப்ரீ செக்கப் என்று ஒன்று நடந்து கொண்டிருந்தது, சும்மாதானே என்று அங்கே போய் அவர்கள் கையில் கொடுத்து பிடிக்கச் சொன்ன கருவியைப் பிடித்ததும்,' சார் நீங்க அநியாயத்திற்கு வெயிட் போட்டு இருக்கீங்க! நாளைக்கு கடற்கரைக்கு வருவீங்களாங்றது கூட சந்தேகம்? உடனே எங்க டயட் கிளினிக் வந்து பாருங்க' என்ற ரீதியில் கருவியின் ரிசல்டைக் காட்டி பயமுறுத்திக் கொண்டு இருந்தார்.

நிறைய காய்கறி பழம் மற்றும் கீரைக்கடை சூப் சூஸ் என்று பத்தடிக்கு ஒரு கடை காணப்படுகிறது, வெறும் வயிற்றோடு உடற்பயிற்சி செய்யவேண்டும் ஆனால் இவர்கள் விடமாட்டார்கள் போல...

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in





Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X