696 புறம்போக்கு நிலங்களில் திட்டங்களை சி.எம்.டி.ஏ., அறிவிக்குமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

696 புறம்போக்கு நிலங்களில் திட்டங்களை சி.எம்.டி.ஏ., அறிவிக்குமா?

Added : ஜூன் 21, 2018 | கருத்துகள் (2)
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை புறநகர் பகுதிகள் உட்பட, 696 இடங்களில், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலங்களை பயன்படுத்தி, புதிய திட்டங்களை உருவாக்க, அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., உருவாக்கும், பல வளர்ச்சி திட்டங்களுக்கு, நிலம் கிடைப்பது சிக்கலாக உள்ளது. நில பிரச்னை காரணமாக, பல திட்டங்களை கைவிடும் நிலை ஏற்படுகிறது.அதனால், புதிய திட்டங்களை அரசுக்கு பரிந்துரைக்கும் முன், ஒவ்வொரு திட்டத்திற்கும், தலா மூன்று இடங்களை தேர்வு செய்யும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், விரைவில், சி.எம்.டி.ஏ., எல்லைக்குள் வரவுள்ளன.எனவே, இந்த இரு மாவட்டங்களிலும், ஆட்சேபனை இல்லாத, அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்த விபரங்களை, வருவாய் துறை வாயிலாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.இது குறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:சி.எம்.டி.ஏ., விடுத்த வேண்டுகோளின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாலுகா வாரியாக, அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டன.அதில், 11 தாலுகாக்களில், 696 இடங்களில், ஆட்சேபனை இல்லாத, புறம்போக்கு நிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.தாலுகா, கிராமம், சர்வே எண் மற்றும் பரப்பளவு அடிப்படையில், இந்த விபரங்கள் தொகுக்கப்பட்டு, சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனவே, விரைவில், சில புதிய திட்டங்களை, அரசுக்கு, சி.எம்.டி.ஏ., பரிந்துரைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-ஜூன்-201811:29:25 IST Report Abuse
Bhaskaran இந்த இடங்கள் எப்போது கண்டறியப்பட்டது 2000 ஆண்டுக்குப்பின் என்றால் கழக உடன்பிறப்புகளாலும் ரத்தத்தின் ரத்ததாலும் வேலிபோட்டு ஸ்வாகா பண்ணியிருப்பார்கள் அதிகாரிகளின் நல்லாசியுடன் முதலில் அதை சரிபார்க்கவும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-ஜூன்-201805:36:44 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதில் எத்தனை இடங்கள் நீர்நிலைகள், நீர் வழித்தடங்களை மறித்து, ஆக்கிரமித்து வளைக்கப்பட்ட இடங்கள் என்று நீதிமன்றங்கள் இப்பவே விசாரிக்குமா? இல்லை அங்கே நீராதாரம் காய்ந்து, அல்லது நீர் செல்ல வழியில்லாமல் வெள்ளம் வந்து உயிர், சொத்துன்னு நாசமான பிறகு விசாரிக்குமா? நீதிமன்றத்தை நான் கூப்பிடுறது ஏனென்றால், இதை பத்தி நாம பேசினா மாவோயிஸ்டுன்னு சொல்லி முத்திரை குத்த பரபரவென்று காத்திருக்கின்றனர். அதனால் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை