Andhra Pradesh line inspector lands in ACB net for Rs 100-cr assets | மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து| Dinamalar

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து

Updated : ஜூன் 22, 2018 | Added : ஜூன் 22, 2018 | கருத்துகள் (56)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எஸ் லஷ்மி ரெட்டி, ஆந்திரா மின் ஊழியர், மின் ஊழியர் லஞ்சம்,மின் ஊழியர் சொத்து, ஆந்திர மின்வாரியம், 
Andhra Electricity Employee, Electricity Employee Bribe, Electrical Employee Property, Andhra Electricity, S. Lakshmi Reddy,

நெல்லூர்: ஆந்திர மின்வாரியத்தில் லைன்மேனாக பணிபுரியும் ஊழியர் ஒருவர், முறைகேடாக ரூ.100 கோடி அளவுக்கு சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.


பறிமுதல்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் மின்வாரியத்தில் லைன்மேனாக பணிபுரிபவர் எஸ் லஷ்மி ரெட்டி, 56. 1993ல் உதவியாளராக பணியில் சேர்ந்த அவர், 1996 ல் உதவி லைன்மேனாக பணிக்கு பதவி உயர்வு பெற்றார். 1997 ல் லைன்மேன் ஆனார்.
அவர் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து நெல்லூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில், அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அவரது தந்தை மற்றும் உறவினர் வீடுகளிலும் சோதனை நடந்தது. அந்த சோதனையில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் ரூ.100 கோடி அளவுக்கு லஷ்மி ரெட்டி சொத்துக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்


மனைவி பெயரில்

இவை, லஞ்சம் வாங்கியும், மின் வாரியத்திற்கு சொந்தமான காப்பர் வயர்கள் மற்றும் சில பொருட்களை முறைகேடாக விற்றும் கிடைத்த பணத்தில் சொத்துகளை வாங்கியுள்ளதாகவும், பெரும்பாலான சொத்துகள் அவரதுமனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sudarsanr - Muscat,ஓமன்
23-ஜூன்-201810:07:35 IST Report Abuse
Sudarsanr \\எத்தனை சர்ச்சுக்கு ஆடிட்டர் வேலை பார்க்குறீங்க?...\\ நீங்க எத்தனை சர்ச்க்கு பார்த்து இருக்கீங்க.. உண்மையா சொன்னா கோவம் பாத்துகிட்டு வருதோ.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
23-ஜூன்-201808:27:48 IST Report Abuse
rajan.  ஊழல் தேசியமயமாகி விட்டது என்பது எழுதபடாத சட்டமோ நம்மூர் ஜனநாயகத்திலே. மொத்தமா முங்காம் போட்டு கையை மட்டும் ஆட்டி கோடிகளில ஆட்டைய போட்டு சம்பளம் படி வாங்கி குதுகுலிக்கிற அந்த ஆசாமிய தான் கேட்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
23-ஜூன்-201806:24:28 IST Report Abuse
Balakrishnan S அடேங்கப்பா... ஒரு லைன் மேனுக்கே 100 கோடின்னா.... அந்த EB Office ஃபோர்மன், என்ஜினியர், EE அனைவரையும் குடைந்து பார்க்கலாமே.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X