உ.பி., மாநில தொழிலாளர்களுக்கு காஷ்மீரில் கல்லெறியும் வேலை?| Dinamalar

உ.பி., மாநில தொழிலாளர்களுக்கு காஷ்மீரில் கல்லெறியும் வேலை?

Added : ஜூன் 23, 2018 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உத்தரபிரதேசம், காஷ்மீர், தொழிலாளர்கள், கல்லெறியும் வேலை, ஜம்மு - காஷ்மீர் ,  புல்வாமா , பாதுகாப்பு படை, டிஜிபி ஓபி சிங், உத்தரபிரதேச தொழிலாளர்கள், 
Uttar Pradesh, Kashmir, Workers, Jammu - Kashmir, Pulwama, Defense Force, DGP OP Singh, Uttar Pradesh Workers,

லக்னோ : ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் வேலைக்குச் சேர்ந்த, உ.பி.,யைச் சேர்ந்த ஆறு பேர், தங்களுக்கு, பாதுகாப்பு படையினர் மீது கல்லெறியும் வேலை தரப்பட்டதாக, பொய் கூறியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின், பாக்பாட், ஷஹாரன்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேர், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், டெய்லர் வேலைக்காக சென்றனர். சமீபத்தில், சொந்த ஊர் திரும்பிய அவர்கள், தங்களை வேலைக்கு அமர்த்திய நபர், மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறியதாகவும், பின், புல்வாமாவில் உள்ள தொழிற்சாலையில், தங்களை அடைத்து வைத்ததாகவும் கூறினர்.ஒரு சமயம், அந்த தொழிற்சாலையில் பணியாற்றும் அனைவரையும், பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறியும்படி நிர்ப்பந்தம் செய்ததால், உ.பி.,க்கு திரும்பியதாகவும் கூறினர்.

ஆனால், உ.பி., மாநில, டி.ஜி.பி., - ஓ.பி.சிங், இந்த தகவலை மறுத்துள்ளார்; அவர் கூறியதாவது:உ.பி.,யில் இருந்து, ஜம்மு - காஷ்மீருக்கு வேலைக்குச் சென்ற இவர்கள், அங்குள்ள தொழிற்சாலையில், சில பொருட்களை திருடியுள்ளனர். போலீசார் தேடியதும், இங்கு தப்பி வந்துள்ளனர். ஆனால், இந்த விஷயத்தை மறைத்து,பாதுகாப்பு படையினர் மீது கல்லெறியும்படி, தாங்கள் நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாக போலீசில் பொய் புகார் அளித்துள்ளனர். இது குறித்து, உ.பி., மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
23-ஜூன்-201815:11:22 IST Report Abuse
madhavan rajan இந்தியாவில் எதுவும் நடக்கும் சாத்தியம் உண்டு. இங்கு எல்லோரும் சத்யவான்கள்தான்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-ஜூன்-201813:17:48 IST Report Abuse
Pugazh V தமிழர்கள் எப்படித்தான் சுய அவமரியாதையை சகித்து கொள்கிறார்கள்?? டுமிளன்களாம்...பிற தமிழர்களே கேவலப்படுத்திக்கறாங்க.. இவர்கள் தன்மானம் இழந்தாச்சு பீஜேபீ க்கு அடிமை ஆயாச்சு...வேறென்ன செய்வது? பிறர்??? சகித்து கொள்ள வேண்டியது தான் வேற வழி?? பீஜேபீ பேப்பர் .. எனவே பீஜேபீ வாசகர்கள் டாமினேஷன் இருக்கத்தான் செய்யும்
Rate this:
Share this comment
sumutha - chennai - Chennai,இந்தியா
23-ஜூன்-201819:26:35 IST Report Abuse
sumutha - chennaiபுகழ் சார் உங்களை போன்றவர்கள் தயவு செய்து மனம் புண்பட வேண்டாம். யார் நன்மை செய்தாலும் அதை ஆதரிக்கும் மனப்பக்குவமும் யார் தீமை செய்தாலும் அதை கண்டித்து எதிர்க்கும் மனோபாவமும் உள்ளவர்களாக நாம் மாறவேண்டும். எந்த ஒரு கட்சியை ஆதரித்தோ எதிர்த்தோ கருதத்தெழுத வேண்டிய அவசியம் நம்மில் யாருக்கும் தேவையில்லை. % இங்கே நான் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்து வந்திருந்தேன். ஆனால் நாட்டில் அமைதியை குலைக்கும் வண்ணம் சில கூட்டங்கள் தமிழர்கள் என்ற போர்வையில் தேசநலனுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுப்பதும். அப்பாவி மக்களை காவு கொடுக்கும் போராட்டங்களை நடத்துவதும். அதை நம்பி அதை நம்பி வளரிளம் பருவத்திலிருக்கும் நமது அடுத்த தலைமுறை ஏதுமறியா பச்சிளம் கன்றுகள் ஆட்டு மந்தைகள் போல் கைதட்டி ரசித்து அவர்களை பின்தொடர்வதும். மனதை நோகடித்ததாலேயே கருத்தெழுத வருகின்றோம். இங்கே கருத்தெழுதும் சில சகோதரர்களை தொடர்ந்து அவர்களின் கருத்துக்களை கவனித்தாலே உங்களுக்கு புரியும். எவ்வளவு பேர் நம் தேச ஒற்றுமையை விரும்பாதவர்களாகவும், குறிப்பிட்ட மன எண்ணங்களை மாற்றாமல் ஒரே உள்ளர்த்தம் இருப்பதாகவே அவர்களின் கருத்துக்கள் இருக்கும். நம் தமிழ் நாட்டில் இத்தனை தலைமுறைகளாக எந்தவித வேறுபாடுகள் இன்றி அனைத்து மதத்தினரும் அனைத்து சமுதாயத்தினரும் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இதுவரை நம்மை ஆண்டு வந்தவர்கள் முழு மக்கள் நலம் கொண்டவர்களாக இல்லை என்பது உண்மை. நம்மில் இருந்து தானே அவர்கள் வருகிறார்கள். நம்மால் ஏன் ஒரு சிறந்த அரசியல்வாதியை அடையாளம் கண்டு பிடித்து தேர்ந்தெடுக்கவில்லை. இங்கே கருத்தெழுதுபவர்களுக்கிடையேயே ஒற்றுமை இல்லாமல் அவரவர்களுக்கு மனதில் பட்டதை எழுதி வெறுப்புணர்ச்சியை கொட்டிக்கொண்டிருக்கிறோம். இப்படித்தான் நாடு முழுவதும் நிறைந்திருக்கிறோம். அதுவே காரணம்............
Rate this:
Share this comment
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
24-ஜூன்-201806:43:37 IST Report Abuse
K.   Shanmugasundararajஎல்லோரும் மதத்துக்கு , சாதிக்கு அடிமையாக இருப்பதால் தான் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றது. சாதி, மதத்தை அவரவர் தனிப்பட்ட விஷயமாக வைத்துக்கொள்ள வேண்டும்.பொதுவில் வைக்க கூடாது. அப்படி வைப்பதால் ஏற்பட்ட விளைவுதான் 1526 ல் ஆண்ட / வாழ்ந்த மக்களால் ஏற்பட்ட நிகழ்வுக்கு 1992 ல் , பதில் அடி தந்ததால் ஏற்பட்ட விளைவுகளை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். அதற்கு ( 1992 ) க்கு பின்பு ஏற்பட்ட விளைவுகள் , போன உயிர்கள் எத்தனை , எத்தனை .சகோதரர்களாய் வாழ்ந்த இந்தியமக்கள் , பிளவு படுத்தப்பட்டு ,மன காயத்தோடு வாழ்கின்றனர். ஓட்டுக்காக முஸாபர்பூரில் சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை , பெரிது படுத்தி , 60000 மக்களை சொந்த நாட்டில் அகதிகளாக்கி , தேர்தலில் வெற்றி பெற்ற நரித்தந்திரம் நாம் அறிந்த ஒன்று. ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தருவோம் என்று இந்த நாட்டின் பிரதமர் தேர்தல் வாக்குறுதி தந்து ஏமாற்றி உள்ளார். அதே போன்று தான் உ.பி மாநில மக்கள் , தங்கள் மாநிலத்தில் வென்று பிரதமராக ஆகி உள்ள மோடி போன்று அவர்களும் பொய் சொல்லி வாழ்க்கை நடத்து கின்றனர். தலைவன் எவ்வழியோ , அவ்வழி தொண்டன்....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-ஜூன்-201812:59:46 IST Report Abuse
Pugazh V தமிழர்கள் எப்படித்தான் சுய அவமரியாதையை சகித்து கொள்கிறார்கள்?? டுமிளன்களாம்... பிற தமிழர்களே கேவலப்படுத்திக்கறாங்க.. இவர்கள் தன்மானம் இழந்தாச்சு பீஜேபீ க்கு அடிமை ஆயாச்சு...வேறென்ன செய்வது? பாவம்
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
23-ஜூன்-201814:05:28 IST Report Abuse
Anandஆடு நனையுதேன்னு..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை