காவிரி ஆணையத்துக்கு கர்நாடக முதல்வர் எதிர்ப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
காவிரி ஆணையத்துக்கு
கர்நாடக முதல்வர் எதிர்ப்பு

பெங்களூரு:காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்கு, கர்நாடக முதல்வர், குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'சட்டத்துக்கு மதிப்பளித்து வருவதால், நாங்கள் செயல்படாத வர்கள் என்பது அர்த்தமல்ல' என, மறைமுக மிரட்டலும், அவர் விடுத்துள்ளார்.

 காவிரி, ஆணையத்துக்கு, கர்நாடக, முதல்வர் ,எதிர்ப்பு


கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, காவிரி ஒழுங்காற்றுக் குழுவை, மத்திய அரசு நேற்று முன்தினம் அமைத்தது.


இது தொடர்பாக, பெங்களூரில் முதல்வர் குமாரசாமி அளித்த பேட்டி:காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து, ஒழுங்காற்றுக் குழுவையும் மத்திய அரசு

அமைத்துள்ளது. மத்திய அரசு அதன் பணியை செய்துள்ளது;அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், ஆணையத்தின் திட்டத்தில், கர்நாடகா வுக்கு அநியாயம் ஏற்படும் வகையில் சில அம்சங்கள் உள்ளன.


மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு சட்டம் திருத்தப்பட்டுள்ளது.அடிப்படை உரிமை களை பறிக்கும் வகையில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப பிரச்னைகளில், திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதையெல்லாம் செய்யாமலேயே ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதுவேன்.


தொழில்நுட்ப பிரச்னைகளை அறிய, நீர்வள வல்லுனர் ஒருவரை நியமித்துள்ளேன். சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, அட்வகேட் ஜெனரலுடன்ஆலோசனை நடத்துவேன்.அனைத்து பிரச்னைகளையும் சட்டப்படி எதிர்கொள்வோம். இன்னும்,15 நாட்களில் மீண்டும் ஒரு முறை சந்திக்க நேரம் ஒதுக்குவதாக, மத்தியநீர்வள துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அப்போது, கர்நாடகாவுக்கு இழைக்கப்பட்டு உள்ள அநியாயத்தை விளக்குவேன். சட்டத்தை மீறாமல், மதிப்பளித்து வருகிறோம். அதனால், நாங்கள்

Advertisement

செயல்படாதவர்கள் என்பது அர்த்தம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


பார்லி.,யில் விவாதிக்காமலேயே, தமிழகத்தின் அரசியல் அழுத்தத்துக்கு பணிந்து, மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது ஒருதலைபட்சமானது. காவிரி விவகாரத்தில், மத்திய அரசும் அரசியல் செய்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து, முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை பரிசீலனை செய்ய வில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்போம்; அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை விரைவில் அறிவிப்போம்.

டி.கே.சிவகுமார் . நீர்வள அமைச்சர், கர்நாடகா


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.C.NATHAN - KANYAKUMARI,இந்தியா
27-ஜூன்-201810:07:48 IST Report Abuse

S.C.NATHANஅய்யா குமாரசாமி அவர்களே, முழுமையாக ஆட்சி பிடிக்கும் அளவுக்கு வோட்டு வாங்க முடியாமல், மாற்று கட்சி துணையோடு முதல்வராய் இருக்கிறீர்கள் . உங்களை ஏன் கர்நாடக மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதை சிந்தியுங்கள் . எதிலும் நேர்மையான சிந்தனையோ, பொது காரியங்களில் நல்ல முடிவெடுக்கும் திறனோ இல்லாமல், ஏனோ தானோ என்று அரசியல் செய்வது, உங்களுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. காவேரி நீர் பொதுவானது.தென் பாரதம் செழித்து ஓங்கிட ஓடுவது. பல ஆயிரம் ஆண்டுகளாய் தென் பாரத மக்களின் தாயாக பார்க்க படுவது.தாயின் கருணை அனைத்து குழந்தைக்கும் பொதுவானது. காவேரி நீர் பங்கீடு விஷயத்தில் ,நீங்கள் எந்த நிலைமையில் இருக்கிறீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள் ஆகவே தான் விவசாய பெருமக்கள் ஒரு மேலாண்மை வாரியம் வேண்டும் என்று கோரி ,இன்று அது அமைக்க பட்டுள்ளது. ஆகவே வாரியம் சொல்வதையும் செவி மடுத்து தமிழக உரிமைக்கு அய்யா குமாரசாமி வழி விடுத்து பயனுற செய்யுங்கள் .இல்லையேல் உங்கள் ஆட்சி மாறும் காலம் மிக அருகில் உள்ளதை உணர்வீர்கள்.நன்றி

Rate this:
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
25-ஜூன்-201808:05:03 IST Report Abuse

வேலங்குடியான்தமிழகத்துல இருந்து பிரிஞ்சது தான் கர்நாடகம்..... யோவ் குரங்குசாமி நீ நேத்து வந்த ஆளு..... காவேரி பொது சொத்து இதை உணர்ந்து செயல்படவும்.....

Rate this:
JSS - Nassau,பெர்முடா
25-ஜூன்-201806:01:15 IST Report Abuse

JSSதிமுகவின் துரோகம்தான் தமிழ் நாட்டுக்கு காவிரி நீர் வராமல் தடுத்துவிட்டது. திமுகவையும் அதன் thalaivargalai யும் கே ஆர் சாகரில் தூக்கி வீச வேண்டும்

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X