அமைச்சர் முன்னிலையில் தவளைகளுக்கு, 'டும் டும்'| Dinamalar

அமைச்சர் முன்னிலையில் தவளைகளுக்கு, 'டும் டும்'

Updated : ஜூன் 24, 2018 | Added : ஜூன் 24, 2018 | கருத்துகள் (20)
Advertisement
அமைச்சர் முன்னிலையில் தவளைகளுக்கு, 'டும் டும்'

சத்ரபூர்: மத்திய பிரதேசத்தில், மழை பெய்ய வேண்டி, தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிகழ்ச்சியில், மாநில அமைச்சர் பங்கேற்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பண்டல்கண்ட் பகுதியில், இரண்டுஆண்டுகளாக மழை பெய்யவில்லை.இதனால், கடும் வறட்சி நிலவுகிறது. இதையடுத்து, இங்குள்ள மக்கள், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். சர்ச்சை : பண்டல்கண்ட் பகுதி யில் உள்ள சத்ரபூர் தொகுதி, பா.ஜ., - எம்.எல்,.ஏ., லலிதா யாதவ். இவர், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில், பண்டல்கண்ட் பகுதியில், நல்ல மழை பெய்ய வேண்டி, சத்ரபூரில், ஒரு கோவிலில், இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், அமைச்சர் லலிதா யாதவ் உட்பட,ஏராளமான மக்கள்பங்கேற்றனர். மந்திரங்கள் முழங்க, இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின், அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது. தவளைகளுக்கு திருமணம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அமைச்சர் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி, மாநிலகாங்., மூத்த தலைவர், அலோக் சதுர்வேதி கூறியதாவது: மக்களுக்கு குடிநீர் வழங்காமல், இதுபோன்ற மூடநம்பிக்கை சம்பந்தமான நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்கிறார்.தேர்தல் வரப்போவதால், மக்களிடம், மத உணர்வை துாண்ட நடக்கும் முயற்சி இது.இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் நடத்திய நிகழ்ச்சி : அமைச்சர், லலிதா யாதவ் கூறுகையில், 'இந்நிகழ்ச்சியை, அரசு நடத்தவில்லை. மக்கள் நடத்திய நிகழ்ச்சியில், தொகுதி, எம்.எல்.ஏ., என்ற முறையில் பங்கேற்றேன். 'மழை பெய்ய, இறைவனை வேண்டும் நோக்கில், நம் நாட்டில், இத்தகைய நிகழ்ச்சிகள் பல ஆண்டுகளாக நடக்கின்றன. இதில் பங்கேற்றதில் எந்த தவறும் இல்லை' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
25-ஜூன்-201808:20:12 IST Report Abuse
Amirthalingam Sinniah அமைச்சரே,உங்களுடைய கண்டுபிடிப்பை மத்தியகிழக்கு நாடுகளுக்கு அறிமுகம் செய்துவைக்கலாமே.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூன்-201810:31:04 IST Report Abuse
Ramesh Rayen டிஜிட்டல் இந்தியா ஒளிர்கிறது
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
24-ஜூன்-201810:10:00 IST Report Abuse
Kuppuswamykesavan அட, மழை பெய்யனும்னா, பசுமை காடுகளை, மரங்களை காப்பாற்றுங்க, அதிகமாக வளர்திடுங்க. எல்லாத்திலயும், குறுக்கு வழிமுறைகளை, சென்டிமென்ட் என்ற முறையில் அனுகுவது, ஏனோ?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை