இந்து முறைப்படி திருமணம்: சீன காதல் ஜோடி அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்து முறைப்படி திருமணம்: சீன காதல் ஜோடி அசத்தல்

Added : ஜூன் 27, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மயிலாடுதுறை: சீனாவைச் சேர்ந்த காதலர்கள், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தைச் சேர்ந்த, டாக்டர் யான், ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்த, அழகுக்கலை நிபுணரான ரூபிங்கை காதலித்து வந்தார். இருவரும், இந்து கலாசாரத்தின் மீதுள்ள பற்று காரணமாக, இந்து முறைப்படி, தமிழகத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் நேற்று, நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த காரைமேடு சித்தர்புரத்திற்கு வந்தனர். சித்தர்களை வழிபட்டு, கோ பூஜை, முதியவர்களுக்கு பாத பூஜை செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மாங்கல்ய தாரணம் செய்து, யான் ரூபிங் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து, திருமணத்திற்கு வந்து வாழ்த்திய கிராம மக்களை வணங்கி, ஆசி பெற்றதுடன், அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
07-ஜூலை-201813:16:21 IST Report Abuse
Darmavan அவர்கள் போட்டோவை ஏன் போடவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-ஜூலை-201809:17:57 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்தியர்கள் அனுஷ்டிக்காத நமது கலாச்சரத்தை அந்நியர் கடை பிடிப்பது... இன்னும் நமது கலாச்சராம் அழியாது இருப்பதற்கு காரணம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X