புள்ளியியல் தினத்தை சிறப்பிக்க 125 ரூபாய் நாணயம் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புள்ளியியல் தினத்தை சிறப்பிக்க 125 ரூபாய் நாணயம் வெளியீடு

Added : ஜூன் 28, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
புள்ளியியல் தினம்,ரூ.125,நாணயம்,வெளியீடு

புதுடில்லி : புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை(ஜூன் 29) வெளியிடுகிறார்.

கடந்த 2007ல் ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அன்று புள்ளியியலாளர் பி.சி.மஹாலனோபிசின் 125வது பிறந்த நாள் என்பதால் சமூக பொருளாதார திட்டமிடலில் புள்ளியியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மஹாலனோ பிசின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

கடந்த 1931ல் ஐ.எஸ்.ஐ., எனப்படும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை மஹாலனோபிஸ் துவங்கினார். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் சார்பில் நாளை மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மஹாலனோபிசின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, 125 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிடுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
28-ஜூன்-201811:39:06 IST Report Abuse
Needhiyin Pakkam Nil தற்பொழுது இந்திய அரசாங்கம் அச்சடித்து புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பு ரூபாயில் 2 , 5 , 10 , 60, 75, 100 , 125, 150, 1000, காகித பணத்தில் 2 , 5 , 10 , 20 , 50 , 100 , 200 , 350 , 500 , 1000 , 2000.
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
28-ஜூன்-201810:59:44 IST Report Abuse
Meenu ஒரு நாட்டுல கூட இந்த அநியாயம் நடக்கல. இந்தியா மட்டும் தான் பெரிய பெரிய ரூபாய் மதிப்பில் நாணயங்களை வெளியிட முற்படுது. இதெல்லாம் நாட்டின் பொருளாதார அழிவிற்கு காரணம். அரசியல் தலைவர்கள் யோசிக்கும் விதம் நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்கின்றனர் ஆட்சியாளர்கள். இனி சிறிய பணமே பத்து ரூபாய் என்று கொண்டு வந்துவிடுவார்கள். பணத்திற்கு மதிப்பு இருக்காது. ஏற்கனவே பிளாட் வைத்திருப்பவர்கள், சதுர அடியை தினமும் ஒரு விலையை சொல்லி கொண்டு திரிகின்றனர். விலை கட்டுப்பாடு என்ற ஒரு வரைமுறையை அரசு கொண்டு வராமல், அவனவன் எவ்வளவுக்கு வேண்டுமானாலும் வித்துக்கங்க என்று விட்டுவிட்டது. கண்டிப்பா நம் சந்ததியார் ஒரு சென்ட் நிலம் கூட வாங்க முடியாத நிலை ஏற்படும். இந்த நாட்டில் வாழ்வதே ரொம்ப கஷ்டமா இருக்க போவுது. அரசு தான் விழித்துக்கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sai mahesh - coimbatore,இந்தியா
28-ஜூன்-201809:17:45 IST Report Abuse
sai mahesh பத்து ரூபாய் காய்ன்சையே வாங்க மாட்டேன்றானுங்க இதிலே வேறே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X