courtalam | ஜோரு..ஜேரு...குற்றாலம் ஜோரு.| Dinamalar

ஜோரு..ஜேரு...குற்றாலம் ஜோரு.

Updated : ஜூன் 29, 2018 | Added : ஜூன் 29, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நீண்ட காலத்திற்கு பிறகு இந்த வருடம்தான் குற்றாலத்தில் சீசன் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது.

நாட்டின் பல பாகங்களில் குறிப்பாக சென்னையில் இன்னமும் வெயில் வறுத்தெடுத்துக் கொண்டு இருந்தாலும் குற்றாலத்தில் கடந்த ஒரு மாத காலமாக மிதமான இதமான சூழ்நிலை நிலவுகிறது கிட்டத்தட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது.

வாரக்கடைசி என்று இல்லாமல் இப்போது வாரநாட்களிலும் கூட்டம் அதிகமாக வருகிறது.வரக்கூடியவர்களும் பெரும்பாலும் கார்களில்தான் வருகின்றனர்.

இதன் காரணமாக காலை 6 மணிக்கு எல்லாம் பழைய குற்றாலம் பகுதியி்ல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது நாம் போயிருக்கும் போது @வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்# என்பது போல ஒரே ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டு 'மேலே கார்ல போகாதீங்க நிறுத்த திருப்ப இடம் இல்லை' என்று சொல்லிக்கொண்டு இருந்தார் அவரிடம்,நாங்க யார் தெரியுமா? எம்எல்ஏ.,மச்சான் என்னையவே விடமாட்டீயா? என்று சொல்லி அதிகாரம் செய்துகொண்டு இருந்தனர் சிலர் இப்படி நிறைய 'மச்சான்கள்' களை அங்கு பார்க்க முடிந்தது.


போலீஸ்காரரும்,' ஐயா நீங்க யாராக வேணும்னாலும் இருந்துட்டு போங்க! மேலே போனா காரை திருப்ப இடம் இல்லைன்னு உங்க நல்லதுக்குதான் சொல்றேன் அப்புறம் உங்க இஷ்டம்' என்று சொல்லி விலகி வழிவிட்டார் மேலே போனபிறகுதான் போலீஸ்காரர் சொன்னது எவ்வளவு நிஜம் என்பது புரிந்தது.

ஐந்தருவி,சிற்றருவி,புலியருவி,மெயினருவி என எல்லா இடங்களிலும் கூட்டம் ஆனாலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் சுகமாக குளித்த மகிழ்வுடன் அனைவரும் காணப்பட்டனர்.தங்கள் தொப்பை தெரியாமல் செல்பியும் எடுத்துக் கொண்டனர்.

குற்றாலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய மங்குஸ்தான்,ரம்டன் உள்ளீட்ட பல பழங்கள் விற்பனை செய்யும் திடீர் கடைகள் பல இடங்களில் முளைத்து இருந்தன.ரம்டன் பழம் நுாறு ரூபாயில் இருந்து முன்னுாறு ரூபாய் வரை விலை போகிறது.பழக்கடைகள் போலவே கோழி,காடை,முயல் போன்றவை விற்கும் கடைகளும் அதிகம் காணப்பட்டன.அசைவப்பிரியர்கள்அள்ளிச் செல்கின்றனர்.இதைத்தாண்டி நுங்கு, மாங்காய் கீத்து சுக்கு காபி என்று நடமாடும் கடைகளும் மக்களை ஈர்க்கின்றன.

லாட்ஜ்கள் ஜஸ்ட் மூவாயிரத்து ஐநுாறு ரூபாய் பிளஸ் டாக்ஸ் என்று சொல்லி பயணியரை பயமுறுத்துகின்றன ஆனாலும் மக்கள் பயப்பட்டது போல இல்லை எல்லா லாட்ஜ்களுமே 'புல்' லாகத்தான் போய்க்கொண்டுஇருக்கிறது.

களைகட்டியுள்ள குற்றாலத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்துடன் களம்காண தயராகிவிட்டீர்களா?

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in





Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X