உத்தரகண்டில் பஸ் கவிழ்ந்து 47 பேர் பலி| Dinamalar

உத்தரகண்டில் பஸ் கவிழ்ந்து 47 பேர் பலி

Added : ஜூலை 02, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 உத்தரகண்டில் பஸ் கவிழ்ந்து 47 பேர் பலி

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில், மலைப்பாதையில் சென்ற பஸ், 700 அடி பள்ளத்தில் விழுந்ததில், 47 பேர் உயிரிழந்தனர்.உத்தரகண்ட் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் பாவ்ரி மாவட்டத்தில் நேற்று, 58 பேருடன் மலைப்பாதையில் சென்ற பஸ், திடீரென, 700 அடி பள்ளத்தில் விழுந்தது.விபத்து பற்றி தகவல் கிடைத்ததும், பேரிடர் மீட்புப்படை வீரர்களும், போலீசாரும், அப்பகுதி மக்களும் சேர்ந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் உயிர்இழந்த, 45 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 13 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.அவர்களில் இருவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை, 47 ஆக உயர்ந்தது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.அளவுக்கு அதிகமான பயணியரை ஏற்றிச் சென்றதால், விபத்து ஏற்பட்டதாக, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனாலும், சாலையில் இருந்த பள்ளத்தில், டயர் இறங்காமல் தவிர்க்க, டிரைவர் முயற்சித்தபோது, பஸ் நிலை தடுமாறி, பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு, 50 ஆயிரம் ரூபாயும் உதவித் தொகை அளிக்கப்படுவதாக, மாநில அரசு அறிவித்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல் : உத்தரகண்ட் மாநில பஸ் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.'டுவிட்டர்' சமூகதளத்தில், மோடி வெளியிட்ட பதிவில், 'உத்தரகண்ட், பாவ்ரி மாவட்டத்தில் பஸ் கவிழ்ந்து, பலர் உயிரிழந்த சம்பவம், அளவு கடந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தோரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்' என, கூறியுள்ளார்.விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு, உத்தரகண்ட் மாநில கவர்னர், கே.கே.பால், முதல்வர், திரிவேந்திர சிங் ராவத் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X