6 ரயிலுக்கு மின் இன்ஜின் ": பயணியர் நிம்மதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

6 ரயிலுக்கு மின் இன்ஜின் ": பயணியர் நிம்மதி

Added : ஜூலை 03, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: டீசலில் இயங்கி வந்த, ஆறு ரயில்கள் இன்று முதல் மின்சார இன்ஜினில் இயங்க துவங்குகின்றன. இதனால், நேரம் குறையுமென, பயணியர் நிம்மதி அடைந்துள்ளனர்.மின் கம்பம், இணைப்பு வசதி விரிவுபடுத்தப்படாததால், ஈரோடு -- கரூர் ---- திருச்சி; கரூர் --- திண்டுக்கல் வழித்தடத்தில் டீசல் இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சில ஆண்டுகளாக ஈரோடு --- கரூர் -- திண்டுக்கல் மார்க்கத்தில் நடந்து வந்த மின்வழித்தடம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மொபைல் போன் டவர், சிக்னல் அமைப்பு, தண்டவாள பராமரிப்பு நிறைவு பெற்று, வெள்ளோட்டம் முடிக்கப்பட்டதால், டீசல் இன்ஜின்களுக்கு இவ்வழித்தடத்தில் இன்று முதல் விடை கொடுக்கப்பட உள்ளது.இதன்படி, நாகர்கோவில், துாத்துக்குடி ரயில்களுக்கு ஈரோட்டில் இன்ஜின் மாற்றப்படாது. மின்சார இன்ஜினில் இவை கரூர், திண்டுக்கல் வரை இயங்கும். 'டீ கார்டன்', ஜனசதாப்தி, செம்மொழி ரயில்கள் திருச்சி வரை மின்சார இன்ஜினில் இயங்கும்.இன்ஜின்களை மாற்ற வேண்டிய நேரம் மிச்சமாவதால், ரயில்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு அடுத்தடுத்த ஸ்டேஷனுக்கு செல்லும். இதனால், இந்த மார்க்கத்தில் செல்லும்

பயணியர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mupaco - Madurai,இந்தியா
03-ஜூலை-201818:24:51 IST Report Abuse
mupaco இன்டெர்சிட்டி திருச்சியில் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் அந்த்யோதயா வருகிறது. குருவாயூர் வரும்வரை வேறு வண்டியும் தென்மாவட்டத்துக்கு இல்லை. அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணி அளவில் சென்னையில் கிளம்பலாம். சிதம்பரம், மணப்பாறை, கோவில்பட்டியில் நிறுத்தலாம்.
Rate this:
Share this comment
Cancel
mupaco - Madurai,இந்தியா
03-ஜூலை-201818:16:41 IST Report Abuse
mupaco குட் மூவ் . இதனை அப்படியே இரட்டைபாதையாக அமைக்க கூடாதா? பட்டுக்கோட்டை பூண்டி திருவாரூர் முடிச்சி விடுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X