பிரசாதம் சாப்பிட்ட73 பேருக்கு மயக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரசாதம் சாப்பிட்ட73 பேருக்கு மயக்கம்

Added : ஜூலை 03, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர்: நன்னிலம் அருகே, கோவில் பிரசாதம் சாப்பிட்ட, 73 பேர் வாந்தி, பேதி ஏற்பட்டு, மயக்கம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, அதம்பாவூர் கிராமத்தில் கைலாச நாதர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபி?ஷகம் முடிந்து, ஓராண்டு நிறைவுபெற்றதை ஒட்டி, கடந்த சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. பின், பக்தர்களுக்கு, சர்க்கரை பொங்கல், புளிசாதம், கொண்டை கடலை சுண்டல் பிரசாதமா வழங்கப்பட்டது. பிரசாதம் சாப்பிட்ட, 73 பேருக்கு, நேற்று முன்தினம், வாந்தி, பேதி ஏற்பட்டு, மயக்கம் அடைந்தனர். உடன், 33 பேர், நன்னிலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; 20 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதம்பாவூர் கிராமத்தில், அரசு மருத்துவ குழுவினர் முகாமிட்டு, 20 பேருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். விசாரணையில், கெட்டுபோன கொண்டை கடலையில் சுண்டல் செய்ததால், அதை சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'கோவில் பிரசாதம் சாப்பிட்டதால் வாந்தி, பேதி ஏற்பட்டதா அல்லது குடிநீர் தொட்டி மூலம் நோய் பரவியதா என, விசாரித்து வருகிறோம். 'மேலும், அப்பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். மருத்துவகுழுவினர், அதம்பாவூரில் முகாமிட்டுஉள்ளனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-ஜூலை-201820:09:51 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ இக்கோவில் கும்பாபி?ஷகம் முடிந்து, ஓராண்டு நிறைவுபெற்றதை ஒட்டி, கடந்த சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. //// ஒரு வேலை கும்பாபிஷேகத்துக்கு செஞ்ச பிரசாதமா இருக்குமோ ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-ஜூலை-201808:26:12 IST Report Abuse
Srinivasan Kannaiya சாமி பார்த்துக்கும் என்று போட்டு இருப்பார்கள்... ஆனால் சாமி காலை வாரி விட்டு விட்டது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X