சச்சின் நிதி பெரம்பலூருக்கு எப்படி?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சச்சின் நிதி பெரம்பலூருக்கு எப்படி?

Added : ஜூலை 04, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: சச்சின் டெண்டுல்கரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பெரம்பலூரில் சாலை அமைக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி காரணம் என தெரிய வந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணிபுரிபவர் ராதாகிருஷ்ணன். இவரது பெற்றோர், பெரம்பலூர் அருகே உள்ள கோல்டன் சிட்டி பகுதியில் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு சச்சின் டெண்டுல்கரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 21.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், பணிகள் துவங்கப்பட்டன. எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், பொதுமக்களுக்காக, தார் சாலை அமைக்காமல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் வீட்டுக்காக, சாலை அமைப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது, சச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஜூலை-201809:03:53 IST Report Abuse
Srinivasan Kannaiya ராதாகிருஷ்ணனால் தனிப்பட்ட முறையில் போட முடியாது... எனவே சச்சினுக்கு அரசு ஒதுக்கீடு செய்த மக்கள் வரிப்பணத்தில் இருந்து செய்ய வைத்து இருக்கிறார்... அந்த தெருவில் உள்ள மற்றவர்களும் அனுபவிப்பார்கள்..இல்லையா...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஜூலை-201809:00:58 IST Report Abuse
Srinivasan Kannaiya ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணிபுரிபவர் ராதாகிருஷ்ணன்..... நல்லதே செய்து உள்ளார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை