சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது: கிரண்பேடி| Dinamalar

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது: கிரண்பேடி

Added : ஜூலை 05, 2018 | கருத்துகள் (29)
Advertisement
Supreme Court,சுப்ரீம் கோர்ட்,தீர்ப்பு,புதுச்சேரி,பொருந்தாது,கிரண்பேடி

புதுச்சேரி : துணை நிலை கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது என சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, புதுச்சேரிக்கு பொருந்தாது என கிரண் பேடி தெரிவித்துள்ளார்.


அரசுக்கே அதிகாரம்:

டில்லியில் துணைநிலை கவர்னருக்கு அதிகாரம் என டில்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது; அரசுக்குத் தான் அதிகாரம் என தீர்ப்பு வழங்கியது.


பனிப்போர்:

டில்லியை போல், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும், அதன் துணை நிலை கவர்னர் கிரண் பேடி - காங்.,கைச் சேர்ந்த முதல்வர் நாராயணசாமி இடையே, நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் எனவும், தீர்ப்பை மீறும் வகையில் கிரண் பேடி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.


தீர்ப்பு டில்லிக்கு மட்டுமே:

தற்போது இதுகுறித்து மவுனம் கலைத்துள்ள கிரண்பேடி, டில்லி அரசியல் சாசன சட்டம்(239 ஏ.ஏ), புதுச்சேரி(239 ஏ) உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களிலிருந்து வேறுபட்டது எனவும், இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பினை வாசித்து காட்டினார். எனவே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது எனவும் அவர் தெரிவித்தார்.


ஆலோசனை :

இந்நிலையில், துணை நிலை கவர்னர் அதிகாரம் தொடர்பாக புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
06-ஜூலை-201808:07:58 IST Report Abuse
Srinivasan Kannaiya விடாதீர்கள்... நாராயண சாமி மற்றும் உள்ளவரகள் எதையாவது சுரண்ட வேண்டும் மென்று எத்தனிக்கிறார்கள்... பெரிய நாமம் ஆக போடுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
06-ஜூலை-201807:44:24 IST Report Abuse
vasumathi செலவு பண்ணி ரப்பர் ஸ்டாம்ப் போல இவர்கள் ஜனாதிபதி இருப்பதை விட, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்க விட்டு கொஞ்சம் அதிகாரம் தாருங்கள். பழைய சட்டத்தை தொலையுங்கள். ஊழல் கட்சிவாதிகளுக்கு ஒரு கடிவாளம் போல இவர்கள் இருக்க வேண்டும். இதற்கு யாரும் கோர்ட்டிற்கு செல்ல மாட்டார்களா ?
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
06-ஜூலை-201806:43:03 IST Report Abuse
K.   Shanmugasundararaj " ருசி கண்ட பூனை உறியை விட்டு இறங்காது " என்ற பழமொழிக்கு ஏற்ப , புதுவை கவர்னர் கிரேன் பேடி அறிக்கை விடுகின்றார்.கவர்னர் தான் எல்லாம் என்றால் சட்டசபை எதற்கு. பேசாமல் கவர்னர் மூலமே புதுவையை ஆட்சி செய்து விடலாம் .சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் , மந்திரிகளுக்கும் கொடுக்கும் சம்பளம் , தேர்தல் செலவுகள் மக்கள் வரிப்பணத்தில் மிஞ்சுமே.மக்களின் பிரதிநிதிகளே ஆட்சி செய்திடவேண்டும்.அவர்கள் ஆலோசனையின் பேரில் தான் கவர்னர் நடக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X