chennai | சென்னையில் மகாபாரத ஒவிய கண்காட்சி| Dinamalar

சென்னையில் மகாபாரத ஒவிய கண்காட்சி

Updated : ஜூலை 05, 2018 | Added : ஜூலை 05, 2018
Advertisement




..எவனொருவன் பொறாமை இல்லாதவனாக,எல்லா உயிர்களுக்கும் அன்பான நண்பனாக,தன்னை உரிமையாளராக கருதாதவனாக,அகங்காரத்தில் இருந்து விடுபட்டவனாக,இன்ப துன்பங்களில் சமநிலை உடையவனாக,சகிப்புதன்மையுடன் எப்போதும் திருப்தியுற்று சுயகட்டுப்பாடு உடையவனாக,தனது மனதையும் புத்தியையும் என்னில் நிலை நிறுத்தி உறுதியுடன் பக்தி தொண்டில் ஈடுபட்டுள்ளானோ,அத்தகு பக்தன் எனக்கு மிகவும் பிரியமானவன்..

-பகவான் கிருஷ்ணர்.

இப்படிப்பட்ட உபதேசங்களை சொல்லும் மகாபாரத கதை அற்புதமான ஒவிய கண்காட்சியாக சென்னை லலித்கலா அகாடமியில் நடந்துவருகிறது.

கேரளாவின் பிரபல ஒவியர் பிரின்ஸ் தொன்னக்கல் 'ஸ்கெட்ச்' போட்டுத்தர அவரது மாணவியர் 35 பேர் வண்ணம் தீட்ட, நான்கு ஆண்டு காலமாக உருவாக்கப்பட்ட சுமார் 135 ஒவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

வியாசர் சொல்லச்சொல்ல விநாயகரால் எழுதப்பட்ட மகாபாரத இதிகாசத்தை முழுவதுமாக விளங்கிக் கொள்ள மிக எளிய தமிழில் ஒவ்வொரு ஒவியத்திற்கும் கிழே எழுதி வைத்துள்ளது மிகச்சிறப்பு.போருக்கு பிறகு மகாபாரதத்தில் நடந்த பல காட்சிகளும் ஒவியங்களாக தீட்டப்பட்டு இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.

மகாபாரதம் என்றாலே கீதாஉபதேசம்தானே நினைவிற்கு வரும் ஆகவே அந்த காட்சி மட்டும் 35 ஒவியங்களாக விதம் விதமாக படைக்கப்பட்டு இருக்கிறது.

வருகின்ற 10ந்தேதி செவ்வாய் கிழமை வரை இந்த ஒவிய கண்காட்சி நடைபெறுகிறது.அனுமதி இலவசம்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in





Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X