Union Minister Jayant Sinha Garlands Ramgarh Lynching Convicts After Release on Bail | கொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்| Dinamalar

கொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்

Added : ஜூலை 07, 2018 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
  கொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்

ராஞ்சி: மாட்டிறைச்சி வியாபாரியை அடித்துக்கொன்ற 8 பேரை மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை அணிவித்து வரவேற்ற சம்பவம் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார்க் மாவட்டம் ஹசாரிபாக் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாட்டிறைச்சி வியாபாரியான அலிமூதின் அன்சாரி,55 என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அவரை பசுப் பாதுகாப்பு படையினர் சிலர் காரை வழிமறித்து அலிமூதினை தாக்கி, தரதரவென இழுத்துச் சென்று அடித்தே கொன்றனர். பின்னர் காரை தீவைத்து கொளுத்தினர். நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவத்தில் 11 பேருக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. இதில் 8 பேர் கடந்த ஜூன் மாதம் ஜாமின் பெற்று வெளியே வந்தனர்.
பசுபாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகள் கொல்லப்படுவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என பிரதமர் மோடியே பேட்டியளிக்கும் நிலைக்கு சென்றது. இந்நிலையில் நேற்று ஹசாரிபாக் பகுதியில் மத்திய அமைச்சர் ஜெயந்த்சின்கா இல்ல நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற 8 குற்றவாளிகளையும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஜெயந்த் சின்கா. அதன் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவியுள்ளன.
கொலை குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சர் மரியாதை செலுத்தி வரவேற்றதற்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவர் ஹே மந்த் சோரன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-ஜூலை-201814:22:04 IST Report Abuse
Nallavan Nallavan குற்றவாளிகள் எப்படி ஒரு சேர ஜாமீன் பெற்றார்கள் ? இப்படி நடந்திருக்கலாம் ..... அமைச்சரின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள சட்ட அனுமதி பெற்று வெளியே வந்திருப்பார்கள் (அதற்குக் கூட குறைந்த பட்சம் இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்) ...... நடராஜன் இறப்புக்கு சசி வெளியே வந்தாரே ..... அதைப்போல ..... தெரிந்தவர்கள் என்ற முறையில் அவர்களுக்கு அமைச்சரும் மாலை, மரியாதை செய்திருப்பார் ..... அதற்காகக் கொலை செய்ததை அங்கீகரித்து சிறப்பித்தார் என்று இதைத் தவறாகச் சித்தரிக்க முடியாது .....
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
07-ஜூலை-201816:02:08 IST Report Abuse
sundaramஏன் இப்படி உங்களால் நினைக்க முடியவில்லை. எப்படியோ கொலைக்குற்றம் சாட்டப்பட்டுவிட்டார்கள். தற்போது ஜாமீனில் வெளி வந்திருக்கலாம். வழக்கு முடிந்து அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று நிரூபிக்கப்படும்வரை அவர்களிடமிருந்து அமைச்சர் ஒதுங்கி இருந்திருக்கலாமே. அப்படி இருந்திருந்தால் இன்றைய இந்த குற்றச்சாட்டு வந்திருக்காதே....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-ஜூலை-201814:02:11 IST Report Abuse
Pasupathi Subbian தேச விரோதிகளுக்கு ஆதரவுக்கு கொடுக்கும் ஒரு கட்சி, நாட்டின் பிரிவினையை ஆதரிக்கும் ஒரு கட்சி, தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் வழக்கத்தை கொண்ட கட்சி, அவர்களுக்கு ராஜ மரியாதையுடன் நாட்டை விட்டு வெளியேற இரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்த ஆட்சியில் இருந்து இப்போது நாட்டின் நலனுக்காக , தண்டனையை கையில் எடுக்கும் வீரர்களை பார்க்க முடிகிறது.இருந்தாலும் இவர்கள் செய்தது தவறு என்பதில் நமக்கு மாறுதல் கருத்து கிடையாது. உயிர் கொலை என்பது ஹிந்துயிசத்தில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
07-ஜூலை-201813:55:53 IST Report Abuse
Agni Shiva இந்த போட்டோவில் இருப்பவர்கள் யாருமே தவறாக செய்து விட வில்லை. இதை தவறு என்று சொல்லி கூமுட்டைகளாக ஹிந்துக்கள் இருந்த காலம் மலையேறி போய் விட்டது. எல்லா மதமும் அமைதியை போதிக்கிறது என்ற வேஷம் போடும் கூட்டத்தில் ஹிந்துக்கள் இனி இருக்கவும் போவதில்லை. ஹிந்து சமயத்தை மதிக்க தெரியாவனுக்கு இந்த இந்தியா இனி சொந்தமில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X