Rapist gets death in MP, first after the new law | 9 வயது சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு மரண தண்டனை: 46 நாட்களில் தீர்ப்பு| Dinamalar

9 வயது சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு மரண தண்டனை: 46 நாட்களில் தீர்ப்பு

Added : ஜூலை 08, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிறுமியை, சீரழித்தவனுக்கு, மரண, தண்டணை

போபால்: ம..பி.யில் பலாத்கார குற்றவாளிக்கு விரைவாக விசாரித்த கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதில் ம..பி. அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின் படி முதல்முறையாக 46 நாட்களில் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ம.பி. மாநிலம் சாகர் மாவட்டம் ரெக்லி என்ற பகுதியைச் சேரந்தவன் நாராயணன் பட்டேல், இவர் கடந்த மே மாதம் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சாகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையில் குற்றவாளி நாராயண் பட்டேலுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி சுதன்ஸூசக்சேனா தீர்ப்பளித்தார்.
இது குறித்து சாகர் மாவட்ட எஸ்.பி., சத்தியேந்திர சுக்லா கூறுகையில், குற்றவாளி கடந்த மே 24-ம்தேதி கைது செய்யப்பட்டான். அவன் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 72 மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு 25 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. டி.என்.ஏ. சோதனை அறிக்கைகள் உள்பட அனைத்தும் 46 நாட்களில் விசாரணை முடிந்து கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. ;குற்றவாளிக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


முதல் தண்டனை


ம.பி.யில் கடந்த ஆண்டு டிசம்பரில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் சட்டசபையில் இயற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஒப்புதல் கிடைக்க பெற்று கடந்த ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டது. புதிய சட்டத்தின் படி முதல் முறையாக பலாத்கார குற்றவாளி நாராயணன் பட்டேலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
08-ஜூலை-201820:57:16 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மேல் முறையீட்டுக்கு அனுமதி இல்லை என்ற வாக்கியம் இடம்பெற்றிருக்கிறதா அப்போ தான் சரியான நீதியான தீர்ப்பாக அமைந்திடும் .கடவுள் ஸ்தானத்தில் நீதபதியை வைத்து போற்றனும் . தமிழ் நாட்ல இதுபோல தீர்ப்பு சீக்கிரம் நீதி வரனுங்க தைரியம் உள்ளசுய நலம்பாரா நீதி பதி இருந்தால் நடக்கும் அதற்கு >>>>>>>>-.
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
08-ஜூலை-201813:01:46 IST Report Abuse
Ab Cd இன்னும் 6 வயது சிறுமியை கற்பழித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வரல ...
Rate this:
Share this comment
Cancel
husain - chennai,இந்தியா
08-ஜூலை-201811:35:48 IST Report Abuse
husain இந்த சட்டத்தை ஆயிரத்துநானுறு ஆண்டுகளுக்கு முன்னாள் உலகம் முழுதும் செயல்படுத்தி இருந்தால் உலகம் அமைதியை அனுபவித்துக்கொண்டு இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
தமிழ் ஹிந்து - chennai,இந்தியா
08-ஜூலை-201812:46:58 IST Report Abuse
தமிழ் ஹிந்துநீங்கள் சொன்னது எத்தனை பேருக்கு புரியும் என்று தெரியவில்லை. .சரியாக சொல்லி உள்ளிர்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X