வசுமித்ர 'வதம்' - வந்தார் வில்லன் வசுமித்ரா| Dinamalar

வசுமித்ர 'வதம்' - வந்தார் வில்லன் வசுமித்ரா

Added : ஜூலை 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வசுமித்ர 'வதம்' - வந்தார் வில்லன் வசுமித்ரா

'சாவுக்கு பயந்து ஓடுறேனா, அவனுக்கு பயந்து ஓடுறேனா, எமன் மாதிரி துரத்துறான் சார்' என கொலையாளிக்கு பயந்து உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் மனநிலையை அப்படியே திரையில் நடித்து காட்டி பாராட்டுதல்களை பெற்றிருக்கும் இவர் எழுத்தாளர், கவிஞரும் கூட, இயக்குனர் சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள அசுரவதம் சினிமா வில்லன் நடிகர் வசுமித்ரா.

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் 2வது சினிமாவிலேயே அபாரமான வில்லனாக ஜொலிக்க துவங்கியிருக்கிறார். பாராட்டுக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக வசுமித்ரா பேசியதிலிருந்து...

பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க குடும்பத்தில் வசதிஇல்லை. காதல் மீதான ஈர்ப்பு என்னை கவிதைகளை எழுத வைத்தன. அதன்படி 'நித்ரா நீ இல்லாத வானம்' உட்பட நான்கு கவிதை தொகுப்புகளை வெளியிட்டேன். அவை பல கவிஞர்கள், எழுத்தாளர்களுடன் நட்பு வட்டாரத்தில் என்னை கொண்டு போய் சேர்த்தது. அப்படி கிடைத்தவர் கொற்றவை. அவரது நண்பர் இயக்குனர் சசிகுமார்.

என் போட்டோவை பார்த்த சசிகுமார், அவருக்கு நடிக்க விருப்பம் இருக்கிறதா என கேட்டிருக்கிறார். எனக்கு எந்த பிரச்னையுமில்லை எனக்கூறி சம்மதித்தேன். அவரது கிடாரி படத்தில் அண்ணனாக நடித்தேன். அது தான் முதல் சினிமா.

அவரே அசுரவதம் படத்தில் மெயின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். என் கதாபாத்திரம் பேசும்படியாக அமைந்தது மகிழ்ச்சி.

படவிழாவிலேயே சசிகுமார், ''நான் நல்லா நடிக்க வேண்டும் என்றால் வில்லனாக நடிப்பவர் நன்றாக நடித்திருக்க வேண்டும். அவரை விட நான் நன்றாக நடித்தால் தான் பேசப்படும். அந்தளவுக்கு வில்லனாக வசுமித்ரா நடித்திருக்கிறார்,'' என பேசியிருப்பது உற்சாகத்தை தந்திருக்கிறது.

படத்தை பார்த்து விட்டு விஜய் சேதுபதி பாராட்டியது மகிழ்ச்சியை தந்தது. தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அதற்காக எழுத்தையும் விடப்போவதில்லை. புத்தர் குறித்த ஒரு ஆய்வு நுால் எழுதி வருகிறேன். எழுதும் போது சந்தோஷமாக இருப்பதாக உணர்கிறேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X