விசாரணையை சந்தியுங்கள்; ரஜினி மனைவிக்கு குட்டு Dinamalar
பதிவு செய்த நாள் :
விசாரணையை சந்தியுங்கள்
ரஜினி மனைவிக்கு குட்டு

புதுடில்லி : ரஜினிகாந்த் நடித்த, கோச்சடையான் படத் தயாரிப்புக்காக வாங்கிய கடனை திருப்பி தராமல் மோசடி செய்த வழக்கில், விசாரணையை சந்திக்கும்படி, லதா ரஜினிகாந்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை,ரஜினி மனைவி,லதா ரஜினிகாந்த்,சுப்ரீம் கோர்ட், உச்ச நீதிமன்றம்,உத்தரவு


கடந்த, 2014ல், 'மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பில், கோச்சடையான் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதற்கு, 'ஆட் - பீரோ' விளம்பர நிறுவனத்திடம் வாங்கிய, 6.2 கோடி ரூபாய் கடனுக்கு, ரஜினியின் மனைவி லதா பொறுப்பேற்றிருந்தார்.

போலீசில் புகார் :


கடன் தொகையை திருப்பி தராமல் மோசடி செய்ததாக, லதாவுக்கு எதிராக, கடன் வழங்கிய நிறுவனம், கர்நாடகா மாநிலம், பெங்களூரு போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில், விளம்பர நிறுவனம் தொடர்ந்த வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, விளம்பர நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அறிக்கை தாக்கல் :


அப்போது, 'லதா மீதான வழக்கை, போலீசார் மீண்டும் விசாரித்து, விசாரணை நீதிமன்றத்தில்

Advertisement

அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

மேலும், 'இந்த வழக்கு விசாரணைக்குரியது. விசாரணையின்போது, நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபியுங்கள். நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். 'விசாரணை நீதிமன்றத்தில், ஜாமின் கோரி விண்ணப்பிக்கலாம்' என, லதாவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - Chennai,இந்தியா
11-ஜூலை-201817:43:27 IST Report Abuse

muraliரஜனி கலைனரிடம், சுடலையிடம் ட்ரைனிங் எடுக்கவேண்டும்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஜூலை-201816:53:31 IST Report Abuse

Endrum Indianகணவன் ஆன்மீக அரசியல், மனைவி அயோக்கிய அரசியல்????வாவ் என்ன அழகான ஜோடி இவர்கள்???இவர் மகளும் அதே டைப் தான்???

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
11-ஜூலை-201813:59:35 IST Report Abuse

தமிழ் மைந்தன் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன் கருணாநிதி அவர்களிடம் வந்து ஆசி மட்டுமே பெற்றார். இதற்கே சுப்ரீம் கோர்ட் கண்டிக்கும் வரை பிரச்சினை உள்ளது. ஐயாவிடம் ஆலோசனையும் பெற்றிருந்தால் அய்யோ தமிழக மக்களே உன்னை காப்பாற்ற யாருமே இல்லையா??? என்னடா தமிழகத்திற்கு வந்த சோதனை

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
11-ஜூலை-201815:19:10 IST Report Abuse

BoochiMarunthuரஜினி பிஜேபி ஏஜென்ட் என்று உலகத்துக்கே தெரியும் . அந்த தைரியத்தில் தான் பணம் கொடுக்காமல் ஏமாத்தி வருகிறார்கள்...

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-ஜூலை-201816:25:44 IST Report Abuse

இந்தியன் kumarஅப்படி என்றால் பாஜகவில் சேர்ந்து இருக்கலாமே ? இந்த மாதிரி யூகம் வரும் என்று தெரிந்து தான் 234 தொகுதியிலும் தனித்து நிட்பேன் என்று உறுதியாக முதல் அறிவிப்பிலே சொல்லி விட்டார் , எனக்கு பின்னல் பாஜக இல்லை என்றும் சொல்லி விட்டார் நீங்கள் நம்பவில்லை என்றால் உலகத்தை சாட்சிக்கு இழுக்காதீர்கள்...

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X