லண்டன் சென்றார் ஸ்டாலின்; சென்னை திரும்புகிறார் ரஜினி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
லண்டன் சென்றார் ஸ்டாலின்;
சென்னை திரும்புகிறார் ரஜினி

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், தனிப்பட்ட பயணமாக, நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினருடன், லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.

Chennai,D.M.K,M.K.Stalin,Rajini,Rajinikanth,Stalin,சென்னை,தி.மு.க,ரஜினி,ரஜினிகாந்த்,ஸ்டாலின்


தன் மனைவி துர்காவுடன், ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு, சென்னை விமான நிலையத்திலிருந்து, எமிரேட்ஸ் விமானத்தில், துபாய் வழியாக, லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். லண்டனில் ஒரு வாரகாலம் தங்கியிருக்கும் ஸ்டாலின், வரும், 16ம்தேதி,

சென்னைக்கு திரும்புகிறார். வரும், 17ம்தேதி, அவரது மருமகன் சபரீசன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார்.

ரஜினி அரசியல் பேச்சு?


ஒரு மாதத்திற்கு முன், புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள, டார்ஜிலிங் சென்றிருந்த ரஜினி, இன்று அதிகாலை சென்னை திரும்புகிறார். நாளை, சென்னை தாஜ் ஓட்டலில், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு பாராட்டு விழா நடக்க உள்ளது.

'அழைப்பிதழில் பெயர் போட வேண்டாம்; விழாவில் நிச்சயம் பங்கேற்கிறேன்' என, ரஜினி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 'ஏற்கனவே, ஏ.சி.சண்முகத்தின் கல்வி நிறுவனத்தில் நடந்த, எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில்

Advertisement

பங்கேற்ற ரஜினி, அரசியல் குறித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதேபோல், இந்த விழாவிலும், நடப்பு அரசியல் குறித்து, ரஜினி பேசுவார்' என, அவரது ரசிகர் மன்ற வட்டாரங்கள் எதிர்பார்ப்பில் உள்ளன.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalam - Salem,இந்தியா
11-ஜூலை-201818:40:13 IST Report Abuse

Kalamரஜினி இன் வெள்ளை தாடியும் வழுக்கை தலையும் உண்மை தோற்றம். ஸ்டாலின் மீசை கருப்பா?

Rate this:
Paddy Sundaram - Chennai,இந்தியா
11-ஜூலை-201818:32:59 IST Report Abuse

Paddy Sundaramஸ்டாலின் என்ன பிசினஸ் செய்கிறார், இவ்வாறு குடும்பத்துடன் லண்டன் பறந்து போக. எவ்வாறு முடிகிறது? ஒரே மர்மமா இருக்கு.

Rate this:
rmr - chennai,இந்தியா
11-ஜூலை-201817:05:59 IST Report Abuse

rmrஇருவருமே தமிழர்கள் இல்லை இந்த ஏமாத்து கூத்தாடிகளுக்கு எதற்காக நேரத்தை வீணடிக்க வேண்டும் இருவருமே தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பிரோஜம் இல்லாதவர்கள் . சுயநலவாதிகள்

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)