கல்லூரியில் சேர பரிதவிக்கும் பார்வையற்ற சகோதரர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் சேர பரிதவிக்கும் பார்வையற்ற சகோதரர்கள்

Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கல்லூரியில் சேர பரிதவிக்கும் பார்வையற்ற சகோதரர்கள்

தஞ்சாவூர் : ஜாதி சான்றிதழ் இல்லாததால், அரசு கல்லுாரியில் சேர முடியாமல், பார்வையற்ற மாற்று திறனாளி சகோதரர்கள் தவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்த தங்கம் என்பவரின் மகன்கள் பிரபுதேவா, 20, மாதவன், 19. இருவருமே, பார்வையற்ற மாற்று திறனாளிகள். தஞ்சாவூரில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளியில், பிளஸ் 2 வரை படித்து, பிரபுதேவா, 748 மதிப்பெண்ணும், மாதவன், 742 மதிப்பெண்ணும் எடுத்துள்ளனர்.

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர்கள், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லுாரியில் சேர்வதற்காக, விண்ணப்பம் அளித்தனர். கல்லுாரி நிர்வாகம், இடஒதுக்கீடு போன்ற பிரச்னைகள் இருப்பதால், ஜாதி சான்றிதழ் இல்லாமல், சேர்த்து கொள்ள முடியாது எனக் கூறி விட்டது.

தாலுகா அலுவலகத்தில், ஜாதி சான்றிதழ் கேட்டதற்கு, 'பிரதமர் மோடி, நரிக்குறவர் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அறிவித்துள்ளார். அதற்கான அரசாணை இன்னும் வராததால், ஜாதி சான்றிதழ் தர முடியாது' எனக் கூறி விட்டனர்.

இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலர் அரவிந்த்சாமி, மாணவர்கள் இருவரையும், கலெக்டர் அண்ணாதுரையிடம் அழைத்து சென்று, மனு கொடுத்தார். சத்திரம் நிர்வாகத்தில் உள்ள கல்லுாரியில் சேர்த்து கொள்ள பரிந்துரை செய்வதாக, கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சகோதரர்கள் கூறுகையில், 'எங்கள் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை. நாங்கள் படித்து, ஆசிரியராக வேண்டும் என்பது தான் லட்சியம். 'ஜாதி சான்றிதழ் இல்லாததால், எங்களை கல்லுாரியில் சேர்க்க மறுக்கின்றனர். என்ன செய்வதென புரியாமல் தவிக்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chails ahamad - doha,கத்தார்
11-ஜூலை-201816:03:49 IST Report Abuse
chails ahamad மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனிதாபிமானம் மிகுந்தவர் என்ற முறையில் இந்த பார்வையற்ற நரி குறவ மாணவர்களை கல்லூரியில் சேர்த்திடுவார் என்பதை நம்புவோம் , ஆட்சியர் அவர்களை மனதார பாராட்டுவோம் .
Rate this:
Share this comment
Cancel
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
11-ஜூலை-201812:17:12 IST Report Abuse
வேலங்குடியான் இங்கு மனிதாபிமானமும் குருடாகி விட்டது..... அரசாணை வெளியிடாதது அரசின் தாமதம்..... இவர்களுக்கான இடஒதுக்கீடு எப்பொழுது வேண்டுமானாலும் கொடுக்கப்படவேண்டும்.....
Rate this:
Share this comment
Cancel
kovai Tamilian - Kovai,இந்தியா
11-ஜூலை-201809:04:12 IST Report Abuse
kovai Tamilian Srilankan போராளீஸ் இதற்கு போராடலாமே. இதற்கு போராடி உங்களுக்கு என்ன பயன்? கரெக்டா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X